என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஒருதலை காதலால் விபரீதம்- நிச்சயமான நர்சை காரில் கடத்த முயன்ற போலீஸ்காரர் கைது
- பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை காரில் ஏற்ற முயன்றுள்ளார்.
- ஒருதலை காதல் விவகாரத்தில் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
நெல்லை:
கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மகன் மாரியப்பன்(வயது 26). இவர் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
மாரியப்பன் கடையம் பகுதியை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.
அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரியப்பன் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் பெண்ணின் பெற்றோரிடம் போய் திருமணத்திற்கு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு இளம்பெண் வந்துள்ளார். அப்போது அவருக்கு வேறொருவருடன் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த மாரியப்பன் நேற்று இரவு தன்னுடன் பட்டாலியனில் பணிபுரியும் சக போலீஸ்காரர் மற்றும் தனது நண்பர்களான கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களுடன் சேர்ந்து ஒரு காரில் சென்றுள்ளார்.
அப்போது பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை காரில் ஏற்ற முயன்றுள்ளார்.
அதனை தடுக்க வந்த அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இளம்பெண்ணை இழுத்து சென்றுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டுவந்து மாரியப்பனை சுற்றிவளைத்தனர்.
இதனால் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாரியப்பனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாாரித்தனர். அதில் ஒருதலை காதல் விவகாரத்தில் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி, ஆட்கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது நண்பர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்