search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமலுக்கு வந்தது தடை: பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்-ஜெயில்
    X

    அமலுக்கு வந்தது தடை: பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்-ஜெயில்

    • தமிழ்நாட்டில் ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் அமலில் இருக்கிறது.
    • சிறு சிறு கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளை ரகசியமாக வைத்து பயன்படுத்தப்படுவதை கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்வது, விநியோகம் செய்வது, இருப்பு வைப்பது, பயன்படுத்துவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவை மீறுபவர்களின் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 15-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதன்படி ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் முடியும்.

    ஏற்கனவே பிளாஸ்டிக் தடை கொண்டு வரப்படுவது பற்றி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அனைவருக்கும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்னறிவிப்பு கொடுத்திருந்த நிலையில் இன்று தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

    அனைத்து மாநிலங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பு கட்டுப்பாட்டு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் அமலில் இருக்கிறது. இதன்படி மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அவ்வப்போது சோதனைகள் நடத்தி பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெரிய வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்து விட்டனர். மறு சுழற்சி செய்யும் வகையில் துணி மற்றும் காகித கூழ் பைகளை பயன்படுத்த தொடங்கி விட்டன.

    சிறு சிறு கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளை ரகசியமாக வைத்து பயன்படுத்தப்படுவதை கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சுற்றுச்சூழல் துறை மூலம் நடவடிக்கையை தீவிரப்படுத்த அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×