search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆற்காடு பஞ்சாங்கத்தில் தக்காளி விலை உயரும் என முன்கூட்டியே கணிப்பு
    X

    ஆற்காடு பஞ்சாங்கத்தில் தக்காளி விலை உயரும் என முன்கூட்டியே கணிப்பு

    • நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
    • ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது.

    ஆற்காடு:

    தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    ஜூலை மாதம் தொடக்கத்தில் உயரத் தொடங்கிய தக்காளி விலை தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதனால், சமையலில் தக்காளி பயன் படுத்துவது குறைந்துள்ளது.

    இந்நிலையில் தக்காளி விலை உயரும் என்பதை ஆற்காடு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சீத்தா ராமய்யர் பஞ்சாங்க குறிப்பில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.

    2023-2024-ம் ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் சோபகிருது தமிழ் ஆண்டின் 34, 35 பக்கங்களில் ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்க்காண கணிப்பில் இந்த தகவல் உள்ளது.

    அறிவியலை மீறி வாழ்வியல் சாஸ்திரமான பஞ்சாங்கத்தில் மழை, புயல், வானிலை, விளைச்சல் குறித்த தகவல்கள் துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆற்காடு ஜோதிடர் சுந்தர்ராஜன் கூறுகையில்:-

    ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறியபடி தற்போது தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் டெல்லி ஒரிசா மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மணல் பிரசனை தீரும். கட்டிட உபகரணங்கள் விலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×