என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது
- விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் காட்சி நடைபெறும்.
- புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி கடந்த 3-ந்தேதி தொடங்கியது. புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ள புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு இன்று ஒருநாள் மட்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை வழக்கம்போல் புத்தகக் காட்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.