search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய எந்திரம்- பொதுமக்கள் வரவேற்பு
    X

    பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய எந்திரம்- பொதுமக்கள் வரவேற்பு

    • பிளாஸ்டிக் பாட்டில்களை தூள்களாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் எந்திரங்களை வாங்கி உள்ளனர்.
    • முதல் கட்டமாக 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர், குளிர்பானம் பாட்டில்களை சாலையோரம் வீசிசெல்வதால் புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வந்தது. இதை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திவிட்டு வீசி செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பாட்டில்களை தூள்களாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் எந்திரங்களை வாங்கி உள்ளனர். முதல் கட்டமாக 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதில் ஒரு எந்திரம் மாமல்லபுரம் கடற்கரை சாலையிலும், மற்றொரு எந்திரம் ஐந்துரதம் பகுதியிலும் வைக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் பகுதியில் துகள்களாக்கப்படுகிறது.

    இந்த எந்திரங்களை மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×