search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரங்கிமலை ரெயில் நிலையம் செல்லும் வழியில் மழைநீர் தேக்கம்
    X

    பரங்கிமலை ரெயில் நிலையம் செல்லும் வழியில் மழைநீர் தேக்கம்

    • ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து சுரங்கப்பாதை பக்கவாட்டு வழியாக பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய படிக்கட்டுகள் உள்ளது.
    • பொதுமக்கள் ஓரமாக செல்ல வேண்டும் என்பதற்காக சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவர் மற்றும் அந்த மின்சார கம்பத்தை பிடித்து செல்கின்றனர்.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு செல்ல ஆதம்பாக்கம் - ஆலந்தூர் இணைப்பு சுரங்கப்பாதை மேலே செல்ல வேண்டும்.

    இதில் ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து சுரங்கப்பாதை பக்கவாட்டு வழியாக பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய படிக்கட்டுகள் உள்ளது.

    இங்கு செல்லும் வழியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. கழிவு நீர் போல் துர்நாற்றம் வீசுகிறது.

    தேங்கியுள்ள தண்ணீரிலேயே ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். தொடர்ந்து அவர்கள் நடந்து செல்வதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கியுள்ள தண்ணீர் அருகிலேயே மின் விளக்கு கம்பம் உள்ளது.

    பொதுமக்கள் ஓரமாக செல்ல வேண்டும் என்பதற்காக சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவர் மற்றும் அந்த மின்சார கம்பத்தை பிடித்து செல்கின்றனர். இதனால் மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது.

    இந்த இடம் ஆதம்பாக்கம் 163-வது வார்டுக்குப்பட்ட பகுதி என்பதால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்ய தர வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×