search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் கொட்டும் மழையில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
    X

    கொடைக்கானலில் கொட்டும் மழையில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருடம் தோறும் மே மாதம் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடைக்கானலில் பகலில் இதமான சீதோஷ்ணம் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகள் குடைகளை பிடித்து கொண்டு பூங்காவில் பூத்துள்ள வண்ணமலர்களை கண்டு ரசித்தனர். மேலும் பூங்கா வளாகத்திற்குள் கோடை விழாவும் நடைபெற்றது. கோடை விழாவில் முரசு கொட்டப்பட்டது. இதனையடுத்து இசைக்கு ஏற்றவாறு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக நடனமாடினர்.

    கொடைக்கானலில் குளுமையான சூழல் நிலவி வருகிறது. மேலும் மலர் கண்காட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. 2500 வகையான மலர்களை சுமார் 6 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர். மேலும் டிராகன் உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன் முன்பு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களுக்கும் சென்று மன்னவனூர், எழும்பள்ளம் ஏரி உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×