search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காந்தியை தவிர்த்தது ஏன்?- தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி
    X

    காந்தியை தவிர்த்தது ஏன்?- தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.
    • இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மட்டும் அஞ்சலி செலுத்தி சென்றது ஏன்? என்று நேற்று தமிழிசை கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதற்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, கவர்னர் வந்த பின்னர் மாலை அணிவிக்க சொன்னார்கள். நான் உளுந்தூர்பேட்டைக்கு செல்ல நேரமாகிவிடும் என்பதால், காமராஜர் மண்டபத்தில் எல்லா மாலையையும் வைத்துவிட்டு, அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வந்தேன்.

    ஆனால் முன்னாள் கவர்னர் தமிழிசை, திருமாவளவன் காந்தியை அவமதித்துவிட்டார், காந்தி மதுஒழிப்புக்கு போராடியவர் அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை.

    மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். காந்தியின் கொள்கைக்கே எதிராக இருக்குமோ என்று சொல்கிறார்.

    அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடியவர் என்று சொல்கிறார்.

    அக்கா தமிழிசை நீங்கள் குடிக்க மாட்டீர்கள், உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போன்றுதான் நானும், எனக்கு அந்த பழக்கம் இல்லை.

    அயல்நாடுகளுக்கு பயணம்செய்துள்ளேன் என் வாழ்நாளில் ஒரு முறை கூட அதை தொட்டதில்லை. இதை தமிழிசைக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காந்தி சிலைக்கு மாலை போடக்கூடாது என்று தடுத்தது காவல்துறை. கவர்னர் வந்த பின்னர் மாலைபோட வேண்டும் என்று சொன்னது காவல்துறை தான் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×