search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    16-வது நிதி ஆணையக்குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்

    • தமிழகத்திற்கான வரி பகிர்வு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
    • வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

    சென்னை கிண்டியில் 16-வது நிதி ஆணையக்குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நிதி ஆணையக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர்.

    வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு சதவீதம் குறித்து மத்திய நிதி ஆணையக்குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * கூட்டாட்சி தத்துவத்தை பயன்படுத்தி மாநிலங்கள் தங்களது தேவையை நிறைவேற்றி கொள்கின்றன.

    * 15-வது நிதி ஆணைய குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 41 சதவீதமாக உயர்த்தியதை வரவேற்கிறோம்.

    * முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியம் ஆகும்.

    * தமிழகத்திற்கான வரி பகிர்வு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    * சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவைய நிதியை அளிப்பதன் மூலம் வளர்ச்சியை தக்க வைக்கலாம்.

    * தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்ல வரி பகிர்வை மாற்றி அமைக்க வேண்டும்.

    * இயற்கை பேரிடர்களின் தாக்கத்தால் தமிழகம் பெரும் பேரழிவை சந்தித்து வருகிறது.

    * அறிவிப்பிற்கு மாறாக 31 சதவீத வரி வருவாய் மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    * மத்திய அரசு அளிக்கும் வரி வருவாய் குறைவதால் மாநில அரசுகளுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

    * வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

    * வளர்ந்த மாநிலங்களை பாதிக்காத வகையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு உரிய நிதி தர வேண்டும்.

    * முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் மாறும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு நிதி வழங்க வேண்டும்.

    * மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×