என் மலர்
தமிழ்நாடு
X
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி
Byமாலை மலர்14 Dec 2024 1:27 PM IST (Updated: 14 Dec 2024 3:05 PM IST)
- ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து இளங்கோவன் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story
×
X