என் மலர்
தமிழ்நாடு

தேவைப்பட்டால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்: இந்தி மொழியை திணிப்பதுதான் பிரச்சனை- கனிமொழி

- நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
- நீங்கள் யார் என்பதை புரிந்து கொள்ள உங்கள் தாய் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
சென்னை:
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இங்கு தமிழும், இந்தியும் இணைந்து வாழ முடியும். அது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால் மொழியை திணிப்பதுதான் பிரச்சனை.
கலை, கலாச்சாரம், மொழி, திரைப்படங்கள் போன்றவற்றை இழந்த பல மாநிலங்களை நான் உங்களுக்கு காட்ட முடியும். அவர்களின் இலக்கியம், திரைப்படங்கள், இசையை இந்தி மாற்றி இருக்கிறது.
இன்று கேரளா, கர்நாடகா இந்தி கற்றுக்கொள்கின்றன. ஆனால் தென் இந்திய மொழியை கற்றுக்கொண்ட ஒரு வடஇந்திய மாநிலத்தை எனக்கு காட்டுங்கள். 3 மொழிகளை கற்றுக் கொள்வது ஒரு பெரிய விஷயம்.
வசதியான குழந்தைகள் மட்டுமே அதை கற்க முடியும் என்பது கட்டுக்கதை. நீங்கள் யார் என்பதை புரிந்து கொள்ள உங்கள் தாய் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மாண்டரின் மற்றும் ஜப்பானிய மொழி உள்பட எந்த மொழியையும் ஒருவர் கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.