என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளுக்கு அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் ஏற்பட்ட நஷ்டம் ரூ.1,900 கோடி
- 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ.3,670 நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை.
தமிழ்நாட்டில் ஏழை மக்கள் பயன்பெறும் மாதந்தோறும் நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நியாய விலைக் கடைகளுக்கு அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில், 5.2 லட்சம் டன் அரிசியில் 15.8 சதவீதம், கசிவு ஏற்பட்டு சிந்தியதாக கூறப்பட்டுள்ளது. பி.டி.எஸ் மூலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ.3,670 நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று விநியோகித்து வரும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்திய அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒவ்வொரு நபரும் மாதத்திற்கு ஐந்து கிலோ வழங்க வேண்டும். அதேபோல் மே 31, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி அரிசி வரைதல் குடும்ப அட்டைகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அரிசி கசிவு தொடர்பான ஆய்வில் இருந்து தமிழ்நாடு இரண்டு அம்சங்களில் ஆறுதலை பெறலாம். கசிவு குறைவாக இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ்நாட்டை விட கசிவு விகிதம் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை. இதனால் சுமார் ரூ69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் இவ்வாறு இருந்தபோதிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பொருட்களின் கசிவைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சிவில் சப்ளைஸ் சிஐடி சுமார் 42,500 குவிண்டால் கடத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தது, அதன் மதிப்பு சுமார் ரூ.2.4 கோடி. அதேபோல் "ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டை புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று 2024-25 ஆம் ஆண்டிற்கான சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்