search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேரணிக்கு அனுமதி மறுப்பு- தடையை மீறி செல்ல தே.மு.தி.க.வினர் முடிவு?
    X

    பேரணிக்கு அனுமதி மறுப்பு- தடையை மீறி செல்ல தே.மு.தி.க.வினர் முடிவு?

    • தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.
    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தே.மு.தி.க.வினர் கூறினர்.

    மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தே.மு.தி.க.வினர் கூறினர்.

    இருப்பினும், காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையிலும் பேரணி செல்வதில் தே.மு.திக.வினர் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×