என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வைரலான யானையின் கருணை- வீடியோ
- யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை.
- சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.
யானை தொழுவத்திற்குள் சிறுவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையுடன் திரும்ப கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிக்கப்படுகிறது.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் வெய்ஹாய் உயிரியல் பூங்காவில் அந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கம்பி வேலி போட்ட அடைப்பிற்குள் விடப்பட்டு உள்ள யானையை ரசிக்க உயரமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
25 வயதான அந்த யானையை ரசித்துக் கொண்டிருந்தபோது 5 வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் தனது காலணியை தவறவிட்டான். அது யானையின் தொழுவத்திற்குள் சென்று விழுந்தது. அப்போது யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை. இருந்தபோதிலும் சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.
சிறுவனும் அதை கைநீட்டி பெற்றுக் கொண்டான். புத்திசாலித்தனமும், கருணையும் மிகுந்த யானையின் இந்த செய்கை அங்கு நின்ற பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்ப, பல்வேறு வலைத்தளங்களுக்கும் அது பரவியது. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 52 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.