என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வான்கோழி கறி விருந்து.. விண்வெளியில் Thanks Giving கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் - வீடியோ
- நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று அமெரிக்காவில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
- வீடியோ வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தாங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து சொல்லியிருக்கிறார்
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்குத் திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இடையில் சுனிதாவின் உடல் எடை மோசாமான அளவு குறைந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை இல்லை என பின்னர் நாசா மறுத்தது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே தாங்க்ஸ் கிவ்விங் கொண்டாடியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ் .
அமெரிக்காவில் வருடத்தின் விவசாய அறுவடைக்கு நன்றி சொல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் [Thanks giving] நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று தாங்க்ஸ் கிவ்விங் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் வீடியோ வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தாங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து சொல்லியிருக்கிறார். அந்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
"We have much to be thankful for."From the @Space_Station, our crew of @NASA_Astronauts share their #Thanksgiving greetings—and show off the menu for their holiday meal. pic.twitter.com/j8YUVy6Lzf
— NASA (@NASA) November 27, 2024
தாங்க்ஸ் கிவ்விங் விருந்தில் சுனிதா மற்றும் குழுவினருக்கு மசித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள், வான்கோழி கறி [smoked turkey], கிரான்பெர்ரி, பச்சை பீன்ஸ், ஆப்பிள் கோப்லர், காலான்கள் உணவாக வழங்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி வாக்கில் பூமி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.