என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பிரதமர் பதவி விலக வேண்டும்: நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
Byமாலை மலர்7 April 2024 12:02 PM IST
- இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது.
- பிரதமர் பதவி விலகக் கோரி இஸ்ரேலில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.
டெல் அவிவ்:
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தைக் கடந்துள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
டெல் அவிவ் நகரில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிரதமர் நேதன்யாகு பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Next Story
×