search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பெற்றோரை தலை துண்டித்து கொலை செய்த மகன்: போலீசாரின் துப்பாக்கி முனையில் கூலாக பாட்டு பாடிய வினோதம்
    X

    பெற்றோரை தலை துண்டித்து கொலை செய்த மகன்: போலீசாரின் துப்பாக்கி முனையில் கூலாக பாட்டு பாடிய வினோதம்

    • பெற்றோர் வளர்த்து வந்த நாயை அவர் கொலை செய்துள்ளார்.
    • வீட்டில் இருந்து ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் தப்பி ஓட முயன்றார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் (41). இவர் தனது பெற்றோர் ரொனால்ட் கெர்ட்வில் (77) மற்றும் அன்டோனெட் கெர்ட்வில் (79) ஆகியோரை கொடூரமாக கொலை செய்து தலையை துண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோர் வளர்த்து வந்த நாயையும் அவர் கொலை செய்துள்ளார். வீட்டில் பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்தவரையும் தாக்கியுள்ளார்.

    அத்துடன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கிராபிக்ஸ் போட்டோவை உறவினருக்கு அனுப்பியுள்ளார். அவர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அதற்குள் வீட்டில் இருந்து ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் தப்பி ஓட முயன்றார். அப்போது சாலையில் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

    அப்போது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய போலீசார் கேட்டுக்கொண்டனர். அப்போது ஜோசப் பிராண்டன் கெர்ட்வில், "நாங்கள் உங்களை விரும்புகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாகப் போகிறீர்கள்" என்றார். மேலும், "என்னை சுட்டு வீழ்த்தி விடுங்கள் எனக் கெஞ்சினார்". தொடர்ந்து சரணடைய மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை சுட்டனர்.

    காயம் அடைந்த நிலையில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் கை விலங்கு போட்டு கைது செய்தனர். காயத்திற்கு சிகிச்சை அளித்தபோது கூலாக பாட்டு பாடினார்.

    பின்னர் போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கெர்ட்வில் இப்போது இரண்டு கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

    Next Story
    ×