search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்
    X

    விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்ற காட்சி.

    விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

    • பால் உற்பத்தி பெருக்கம், தீவன பராமரிப்பு, கால்நடைகளுக்கான காப்பீடு பற்றி விளக்கிக் கூறினார்.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை பல்நோக்கு ஊழியர் தம்புசாமி செய்திருந்தார் .

    புதுச்சேரி:

    புதுவை அரசு வேளாண்துறை கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தில் கால்நடைகளில் இனவிருத்தி பால் உற்பத்தி பெருக்குவது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் கோர்க்காடு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் அருகில் நடந்தது.

    முகாமை வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கரிக்கலாம் பாக்கம் அரசு கால்நடை டாக்டர்கள் ப்ரீத்தா, தாமரை செல்வி, செல்வமுத்து ஆகியோர் கறவை மாடுகளின் மேம்பாடு, பால் உற்பத்தி பெருக்கம், தீவன பராமரிப்பு, கால்நடைக ளுக்கான காப்பீடு பற்றி விளக்கிக் கூறினார்.

    முகாமில் கரிக்கலாம்பக்கம், கோர்க்காடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

    இறுதியில் விவசாயிகளுக்கு கால்நடை சத்துடானிக் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை பல்நோக்கு ஊழியர் தம்புசாமி செய்திருந்தார் .

    Next Story
    ×