search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செங்கழுநீர் அம்மன் கோவிலில்  நாளை தேரோட்டம்
    X

     ஆலோசனை கூட்டத்தில் பாஸ்கர் எம்.எல்.ஏ. போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், ஆணையர் ரமேஷ், , கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமானந்தன், தனி அதிகாரி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    செங்கழுநீர் அம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    புதுச்சேரி:

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.

    அதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் , கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமானந்தன், தனி அதிகாரி சுரேஷ், பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட வீராம்பட்டினம் கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்

    டனர். தேரோட்டத்தை யோட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    மேலும் அப்பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் புறக்காவல் நிலையம் கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆம்புலன்ஸ் வசதி தீயணைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கோவிலுக்கு வருபவர்கள் வீராம்பட்டினம் ரோடு வழியாக செல்லவும், கோவிலில் இருந்து வருபவர்கள் சின்னவீராம்பட்டினம வழியாக மணவெளி வழியாக கடலூர் - பாண்டி ரோட்டில் செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    Next Story
    ×