search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜிப்மர் மருத்துவ மாணவர்களுக்கு பட்டம்
    X

    ஜிப்மர் மருத்துவ மாணவர்களுக்கு கேன்சர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிகண்ணன் பட்டம் வழங்கிய காட்சி.

    ஜிப்மர் மருத்துவ மாணவர்களுக்கு பட்டம்

    • ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிகண்ணன் தலைமை வகித்து பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
    • 130 மாணவர்கள் உட்பட பல்வேறு மருத்துவ படிப்புகளை முடித்த 442 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடந்தது.

    ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ்அகர்வால் வரவேற்றார்.

    கேன்சர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிகண்ணன் தலைமை வகித்து பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். ஜிப்மர் தலைவர் விஷ்வமோகன் கடோச் முன்னிலை வகித்தார்.

    பட்டமளிப்பு விழாவில் எம்.பி.பி.எஸ். படித்த 186, எம்.டி. படித்த 130 மாணவர்கள் உட்பட பல்வேறு மருத்துவ படிப்புகளை முடித்த 442 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது

    Next Story
    ×