search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பணியாளர் தேர்வாணையம்- செல்வகணபதி எம்.பி. கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    அரசு பணியாளர் தேர்வாணையம்- செல்வகணபதி எம்.பி. கோரிக்கை

    • யூனியன் பிரதேசமான புதுவையில் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை போல அரசு பணியாளர் தேர்வாணையம் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொண்டு வருகிறேன்.
    • வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மொழி மிகப்பெரிய தடையாக உள்ளது.

    புதுச்சேரி:

    டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தில் புதுவை எம்.பி. செல்வகணபதி பேசியதாவது:-

    யூனியன் பிரதேசமான புதுவையில் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை போல அரசு பணியாளர் தேர்வாணையம் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொண்டு வருகிறேன்.

    அரசு பணிகளில் குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' பிரிவுகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு பயனிக்கும் இதை அண்டை மாநிலங்களில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணயம் உறுதி செய்கிறது. ஆனால் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர் குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் பணியிடங்களை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    இதற்கு காரணம் புதுவைக்கு தனி அரசு பணியாளர் தேர்வாணயம் இல்லாததே ஆகும். புதிதாக சுகாதாரத்துறை மருத்துவர்கள், வல்லுனர்கள், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் போது யு.பி.எஸ்.சி.யிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அவர்கள் அகில இந்திய அடிப்படையில் தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். பரிசீலிக்க வேண்டும் தே சிய அளவில் தேர்வுகள் நடத்தப்படுவதால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த ஊரில் அரசு வேலைக்காக அகில இந்திய அளவில் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மொழி மிகப்பெரிய தடையாக உள்ளது.

    பள்ளி முதல்வர்களாக வருபவர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாததால் மாணவர்கள், பெற்றோர்களிடம் எவ்வாறு பேசுவார்கள். இது வெற்றிடத்தை உருவாக்குகிறது.

    எனவே புதுவை யூனியன் பிரதேசத்தில் அரசு பணியா ளர் தேர்வாணையம் அமைக்க மத்திய உள்துறை அமை ச்சகம் பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு செல்வகணபதி எம்.பி. பேசினார்.

    Next Story
    ×