search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நான் எவ்வளவு பேச வேண்டும் என்பதை புதுச்சேரி எம்.பி. தீர்மானிக்க முடியாது- கவர்னர் தமிழிசை அதிரடி பதில்

    • நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.
    • படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.

    காமராஜர் கல்வி வளாகத்தில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில், நடிப்பவர்கள் கூட படிப்பை சொல்லி கொடுத்தால் தான் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

    விழா முடிவில் கவர்னர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் கூறியுள்ளாரே? என கேட்டதற்கு, பேச்சு உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது.

    அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்கமாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.

    மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்கிறாரே. இதை அரசியலில் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள்.

    சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். யாராக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்களாக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்நோக்கம் இல்லை என்றார்.

    Next Story
    ×