என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்கள் தொகை கணக்கெடுப்பு"
- நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
- 85 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பல்வேறு சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள், அறிவார்ந்த நபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அவர்களுடைய கருத்துகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1993-ம் சட்டத்தின்படி இதற்கு முன் கல்வி, வேலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து சாதியினரின் சமூகப் பொருளாதார விவரங்களை சேகரிக்கும்.
இந்த பணியில் 48 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட இரக்கிறார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் தொடக்க பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும். ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று தரவுகளை பெறுவார்கள். சமூகம், கல்வி, வேலை, பொருளாதாம், அரசியல் போன்ற தரவுகளை சேகரிப்பாளர்கள். மொத்தமாக 85 ஆயிரம் பணியில் ஈடுபடுத்தபட இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சாதிவாரி கணக்கெடுப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நீதியை உறுதி செய்வதாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
- இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.
- கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை சமூகம் வாரியாக ஆராய்ந்து செயல்படுத்த முடியும்.
இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 16-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடித்து விவரங்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த கணக்கெடுப்புக்கான கேள்விகள் தயாராகி உள்ளன. மொத்தம் 31 கேள்விகள் அதில் அடங்கி இருப்பதாக தெரிகிறது. குடும்பத்தலைவர், வீடு, நிலம் உள்ளிட்ட கேள்விகளுடன் செல்போன் இருக்கிறதா? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? கழிவறை வசதி இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகளும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
கணக்கெடுப்பை ஓராண்டுக்குள் முடித்து, அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை பணிகளை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த 2 வேலைகளும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு செய்யப்பட்டு விடும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகூட சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்துள்ளது. ஆனால் அரசு இதுபற்றி எந்த முடிவையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி எல்லையை மறுவரையறை செய்வது, தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மக்கள்தொகை கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. ஆனால் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தாமதம் ஆகிவிட்டதால், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2035-ம் ஆண்டு, அதற்கு அடுத்து 2045-ம் ஆண்டு என சுழற்சி முறையில் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதிக்கப்டுகிறது என்று SCoS குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
- பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழு கடந்தாண்டு ஜூலை 13 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம் தொடர்பான விவகாரத்தில் புள்ளியியல் நிலைக்குழு [Standing Committee on Statistics (SCoS)] மத்திய அரசால் கலைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழு கடந்தாண்டு ஜூலை 13 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய மாதிரி கணக்கெடுப்புக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஸ்டீரிங் கமிட்டியின் செயல்பாடுகளுடன் SCoS குழுவின் செயல்பாடுகள் குழப்பிக்கொள்ள கூடாது என்பதற்காக SCoS குழுவை கலைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் 2021 ஆம் ஆண்டியேலே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டிய நிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாகயும் ஏன் கணக்கெடுப்பு தாமதிக்கப்டுகிறது என்று SCoS குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதன் காரணமாகே தற்போது SCoS குழு கலைக்கப்பட்டுள்ள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
- மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும்.
- கருவூறுதல் குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம்.
புதுடெல்லி:
இந்தியாவில் `பெண்கள் மற்றும் ஆண்கள் 2023' என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் 2036-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என எதிர்பார்க்கப் படுவதாகவும், 2011-ல் பெண்கள் சதவீதம் 48.5 ஆக இருந்த நிலையில், 2036-ல் 48.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என பாலின விகிதம் இருந்தது. இது 2036-ம் ஆண்டில் ஆயிரத்திற்கு 952 ஆக உயரும் எனவும், இது பாலிய சமத்துவத்திற்கான நேர்மறை குறியீட்டை காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதிற்குட்பட்ட தனி நபர்களின் வீதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருவூறுதல் குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கால கட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 முதல் 2020-ம் ஆண்டு வரை கருவூறுதல் சதவீதம் 20-24 வயதில் 135.40-ல் இருந்து 113.6 ஆக குறைந்துள்ளது. 25-29 வயதில் 166-ல் இருந்து 139.6 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் 35-39 வயதில் கருவூறுதல் விகிதம் 32.7 சதவீதத்தில் இருந்து 35.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
- மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணைய தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையை கழித்து பார்த்தால் 130.2 பேருக்கு ஆதார் எண்கள் உள்ளன' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்