search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு நிதி"

    மீன்வளத்துறை சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்த ரூ.160 கோடி நிதி மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக புதுவை மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் டெல்லியில் மத்திய மீன்வள அமைச்சக செயலாளர், மீன்வள அமைச்சக இணை செயலாளர், மீன்வள ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது புதுவை அரசின் மீனவர் நலம் மற்றும் மீன்வளம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய மீன்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    புதுவையில் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம், காரைக்கால் மற்றும் ஏனாம் மீன்பிடிதுறைமுகங்களை நவீனப்படுத்தி விஸ்தரிக்கவும், புதுவை பகுதியில் நல்லவாடு, பெரியகாலாப்பட்டு பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கவும் மொத்தம் ரூ.140 கோடி நிதி வழங்க மத்திய மீன்வள அமைச்கம் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தவுடன் நிதிஒதுக்கீடு புதுவை அரசுக்கு கிடைக்கும்.

    மேலும் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் புதிய மீன் ஏலக்கூடம், மீன்அருங்காட்சியகம், நவீன மொத்த மற்றும் சில்லரை மீன் வணிக வளாகம் ஆகியவையும், மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண உதவியை ரூ. 4 ஆயிரத்து 300 ஆக உயர்த்தவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு மானியம் வாங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடி வழங்கவும், நன்னீர் மீன் வளர்ப்புக்கு மானியமாக ரூ 1 லட்சமும், உவர்ப்பு நீர் மீன்வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.26 லட்சமும், மீன்பிடி படகுகள் மற்றும் என்ஜின்களை புதுப்பித்து உதவி வழங்க ரூ.60 லட்சமும் மத்தியஅரசு நிதி வழங்கி உள்ளது.

    புதுவை அரசு மீன்வளத்துதுறை சார்பில் புதிய திட்டங்களுக்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்பித்து விடுத்த கோரிக்கைகளை அடுத்து மொத்தம் ரூ.159 கோடியே 67 லட்சம் அளவிலான நிதி ஒதுக்கீடு மத்திய மீன்வள அமைச்சகத்திடமிருந்து கிடைத்துள்ளது.

    இந்த தகவலை புதுவை மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ×