என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மினிலாரி மோதல்"
சின்னசேலம்:
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது57). இவர் சின்னசேலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்து வந்தார். இவர் தினமும் காலையில் நடை பயிற்சிக்கு செல்வார்.
இன்று காலை வழக்கம் போல் சின்னசேலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுப்பிரமணியன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது.
அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினிலாரி மீது மோதியது. அந்த மினிலாரி நிலை தடுமாறி சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணியன் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் மினிலாரி அடியில் சுப்பிரமணியன் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான சுப்பிரமணியனுக்கு மனோன்மணி (51) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
பாகூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது54). இவர் கடலூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை இவர் கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடை பகுதிக்கு வந்திருந்தார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக கலியபெருமாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கலியபெருமாளை அங்கிருந்தவர்கள் மீட்டு பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்