என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூதாட்டி பலி"
- ரெயில் வந்ததை அறியாத மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது.
- மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடந்து சென்றார்.
அப்போது ரெயில் வந்ததை அறியாத அந்த மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது. இதில் மூதாட்டி உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டி வைத்திருந்த பையில் அவரது வங்கி புத்தகம், ஆதார் அட்டை இருந்துள்ளது.
மேலும், இறந்த மூதாட்டி ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமப்பகுதியைச் சேர்ந்த வெங்கட்டன் மனைவி மூக்கியம்மாள் என்பதும், அவர் அரசு வங்கியில் தனது முதியோர் உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மூக்கியம்மாள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மூதாட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- இந்நிலையில் கழிவறையில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி, மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லெட்சுமி (58). கடந்த சில நாட்களாக துரைராஜ் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆண்கள் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உதவியாக மனைவி லெட்சுமி இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த வார்டில் உள்ள கழிவறைக்கு சென்ற லெட்சுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது வழுக்கி விழுந்து சுயநினைவு இன்றி விழுந்து கிடந்தார். இவரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லெட்சுமி உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரி வார்டு கழிவறையில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார்.
- மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர் வடகரை மேலூர் உலைக்கூட தெருவை சேர்ந்தவர் வேல். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் பஷீர் பேகம் மீது மோதியது.
- கல்லூரி மாணவரான லோகேஷ் காலிலும் முறிவு ஏற்பட்டது.
போரூர்:
மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்தவர் பஷீர் பேகம் (வயது60). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் பஷீர் பேகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பஷீர் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான லோகேஷ் (19) என்பவரது காலிலும் முறிவு ஏற்பட்டது. அவருக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் விசாரணை நடத்தி வருகிறார்.
- மலைத்தேனீக்கள் சரஸ்வதி கடித்தது.
- சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த பட்டகாரன்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று தண்ணீர் காய வைக்க தென்னை மட்டையை எடுத்தார்.
அப்போது அதில் இருந்த மலைத்தேனீக்கள் அவரை கடித்தது. அவருடை சத்தம் கேட்டு வந்த பேரன் குமரேசனையும் தேனீக்கள் கடித்தது.
இதனையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வேன் ஒன்று மொபட்டின் மீது மோதியது.
- சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பயனின்றி இறந்தார்.
சிவகிரி:
கொடுமுடியை அடுத்த முத்தையன்வலசை சேர்ந்தவர் தங்கமணி (38) கூலி்தொழிலாளி. இவர் தனது மாமியார்கள் பாப்பாள் (75), ராமாயி (70) ஆகியோரை மொபட்டில் அமரவைத்து கொண்டு சிவகிரி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது முத்தையன்வலசில் இருந்து வேலாயுதம்பாளையம் ரோட்டில் வந்த வேன் ஒன்று இவர்கள் சென்று கொண்டிருந்த மொபட்டின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் மொபட்டில் சென்று கொண்டிருந்த 3 பேர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ராமாயி மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பயனின்றி இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தங்கமணி அளித்த புகாரின்பேரி்ல் சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாம்பிராணி தூவ தீ மூட்டியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 71). 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். சண்முகம் நேற்று சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தனியாக இருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று ராஜேஸ்வரி வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து உள்ளார். அப்போது சாம்பிராணி புகை தூவுவதற்காக மரக்குச்சிகளை தீயிட்டு எரித்தார்.
எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த பஞ்சு மெத்தைக்கு பரவியது. பஞ்சு மெத்தை சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் வீடு முழுவதும் கரும்பு புகை மண்டலம் சூழ்ந்தது.
தீயை அணைக்க ராஜேஸ்வரி வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்தார். இருப்பினும் வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால் ராஜேஸ்வரி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
வீட்டில் புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் சென்று கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்கள் குடியாத்தம் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அப்போது அங்கே வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.
ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- புதரில் இருந்து கூட்டமாக வந்து அவரை கொட்டியது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே வட திண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகா(வயது 68). இவர் காலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிக்கு சென்றார்.
பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக புதரில் இருந்த குளவிகள் கூட்டமாக வந்து அவரை கொட்டின. இதில் படுகாயம் அடைந்த கனகாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சை க்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கனகா இறப்பு தொடர்பாக அவரது மகன் விஜய் பிரகாஷ் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் கன்னி யப்பன் தலைமையிலான போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளின் வீட்டிற்கு சென்றார்.
- சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 62). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலம் அருகே உள்ள தென்பசாரில் உள்ள அவரது மகளின் இல்லத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று பெர மண்டூருக்கு வருவதற்காக தென் பசாரில் உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
அப்போது விழுப்புரத்தி லிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுசிலா பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இந்நிலையில் சுசிலா மீது மோதிய காரை, அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மயிலம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார்? என விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில்வே நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாரா தவிதமாக மூதாட்டி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிசிச்சை பலனின்றி அந்த மூதாட்டி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவ ரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போ லீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார் ? எந்த ஊர் ? என்ற விசாரித்து வருகின்றனர்.
- மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த உண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உண்ணாமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்சில் இருந்து இறங்கியபோது பரிதாபம்
- வழக்குப்பதிவு செய்து விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு நிர்மலா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி. இவரது தாயார் பாத்திமா (வயது 63). இவர் திருவண்ணா மலை அருகே மருத்துவாம்பாடியில் உள்ள கணவர் லூர்து சாமியை வாரத்துக்கு ஒருமுறை சந்தித்து விட்டு வருவது வழக்கம்.
அதன்படி பாத்திமா மருத்துவாம்பாடிக்கு சென்றுவிட்டு மீண்டும் சேத்துப்பட்டுக்கு பஸ்சில் வந்தார். நிர்மலா நகர் வந்தவுடன் பஸ்சின் படிக்கட்டில் இறங்கிய போது திடீ ரென பாத்திமா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்