search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு"

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் ஒருவாரத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி குறைந்து உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று 7ஆயிரத்து 53 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று 7ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக 22ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 6-ந் தேதி 120 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 115.88 அடியாக இருந்தது. இன்று காலை மேலும் குறைந்து 114.98 அடியாக உள்ளது. கடந்த ஒருவாரத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.  #MetturDam
    ×