என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாட்ஸ் அப்"
- பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது.
- வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனுஷ்வெங்கட் (வயது 20) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் பணியாற்றினார். ஒரே நிறுவனத்தில் பணியாற்று வதால் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தனுஷ்வெங்கட் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறினார். முதலில் அந்த பெண், காதலை ஏற்க மறுத்தார். ஆனால் தனுஷ்வெங்கட், விடாமல் காதல் வலை வீசினார்.
தனுஷ்வெங்கட்டின் ஆசைவார்த்தைகளில் மயங்கி அந்த பெண்ணும் அவரை காதலிக்கத் தொடங்கினார். நேரில் சந்தித்து பேசுவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு திரும்பியபிறகு அவர்கள் செல்போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு தனுஷ்வெங்கட், அந்த பெண்ணை வாட்ஸ்-அப் அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணை ஆடையின்றி பார்க்க விரும்புவதாக கூறி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் தானே உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், பிறகு ஏன் தயங்குகிறாய் என கூறி கெஞ்சி உள்ளார்.
அந்த பெண்ணும் தனுஷ்வெங்கட்டை நம்பி, அவர் கூறியதுபோல வாட்ஸ்-அப் அழைப்பில் ஆபாசமாக நின்றுள்ளார். அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே தனுஷ்வெங்கட் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். அதன்பின் காதலியின் ஆபாச வீடியோவை அடிக்கடி பார்த்து ரசித்துள்ளார்.
அவர் ரசித்தது மட்டுமல்லாமல் தனது நண்பர் ஒருவருக்கும் காதலியின் ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த நண்பர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். காரணம் அவர் அந்த இளம்பெண்ணின் உறவினர் ஆவார். உடனே அவர் ஆபாச வீடியோ குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பெண்ணை கண்டித்தனர். அப்போது தன்னை ஏமாற்றி தனுஷ்வெங்கட் ஆபாச படம் எடுத்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து கோவை மேற்கு மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனுஷ்வெங்கட்டை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் தனுஷ்வெங்கட்டின் நடவடிக்கைகளால் பிடிக்காமல் அவர் காதலித்த பெண் அவரை விலகிச் சென்றுள்ளார். மீண்டும் அந்த பெண், தன்னுடன் பழக வேண்டும் என்று எதிர்பார்த்த தனுஷ்வெங்கட், பெண்ணை மிரட்டும் வகையில் அவரது உறவினரான தனது நண்பருக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். தற்போது போலீசில் சிக்கிக் கொண்டார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி விட்டன. எனவே பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது. வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.
- மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர்.
- 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்ஜுக்கர்பெர்க் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அப்போது ஒரு பயனர் மார்க்ஜூக்கர்பெர்க்கிடம் நீங்கள் முதல் பேஸ்புக் கணக்கை உருவாக்க பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி எது என்று கேட்டார். அதற்கு மார்க்ஜூக்கர்பெர்க் அளித்த பதிலில், 2004-ம் ஆண்டில் பேஸ்புக்கில் முதல் கணக்கை பதிவு செய்ய 'mzuckerb@fas.harvard.edu' என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாக கூறினார்.
மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர். ஆனால் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய முதல் நபர் அல்ல. அவருக்கு முன்பே 3 ஐ.டி.கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் சோதனைக்காக ஒதுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன.
இதன்படி பேஸ்புக்கில் 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது. 5-வது மற்றும் 6-வது கணக்குகள் ஜுக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக்கை தொடங்கிய இணை நிறுவனர்களுடையது ஆகும்.
- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன
- பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது
இந்தியாவில் உள்ள பலருக்கும் வாட்ஸ்-அப்-இல் மோடியின் கடிதம் என்ற குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தேர்தல் விதி மீறல் என்று காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது
'விக்சித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த வாட்ஸ் அப் செய்தியில், அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்பதாக தெரிவித்துள்ளது
இந்த வாட்ஸ்-அப் செய்திக்கு கேரள மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "வாட்ஸ்-அப் செய்தியில் கருத்து கேட்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளே இருப்பதோ தேர்தல் பரப்புரை. வாட்ஸ்-அப் கொள்கைப்படி, அரசியல் பரப்புரைகளை தடுப்பதாக கூறுகிறது. ஆனால், எப்படி தேர்தல் தொடர்பான பரப்புரைகளை வாட்ஸ்-அப் அனுமதிக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வாட்ஸ்-அப் செய்தி இந்தியர்களை தாண்டி உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த பிரசார செய்தி அனுப்பப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
- விவசாயிகள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை வாட்ஸ்-அப் மூலம் பெறலாம் என அதிகாரி தெரிவித்துள்ளனர்.
- இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயம் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழை பொய்த்துப்போகும் ேபாதெல்லாம் வறட்சியின் பாதிப்பும், கூடுதல் மழை காரணமாக பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. பருவ காலங்கள் வாரியாக பார்க்கும்போது வடகிழக்குப் பருவமழை காலங்களில் மொத்த மழையில் 61 சதவீதம் பெறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பியே மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. உணவு உற்பத்தியில் வானிலை காரணிகளில் ஏற்படும் மாறுதல்கள், அதாவது காலம் தவறிய மழை, அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம், காற்றின் ஈரப்பதம் ஆகியவையும் பயிர் வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கக்கூடும்.
மழைப்பொழிவும் காலநிலை மாற்றம் காரண மாக சீராக இல்லாமல் பெரு மளவு மழை சில நாட்களி லேயே பெய்து விடுவதால் விவசாய பணிகளுக்கு பயன்படாமல் மழைநீர் பெருமளவு வீணாகிறது. இந்த சூழ்நிலையில் இயற்கை இடர்பாடுகள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க வானிலை சார்ந்த வேளாண் செயல்பாடுகள் அவசியமான ஒன்றாகிறது.வேளாண்மை யில் பருவகால மாற்றம் மற்றும் பாதகமான காலநிலையின் காரணமாக ஏற்படும் இழப்பு களை முழுஅளவு தவிரப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. இருப்பினும் வானிலை பற்றி முன்கூட்டியே அறிந்தால் தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இழப்பை ஓரளவிற்கு தவிர்க்க முடியும்.
இதனை கருத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வுத்துறையால் மத்திய கால வேளாண் முன்னறிவிப்பானது கணினி மாதிரிகள் மூலம் கணிக்கப் பட்டு விவசாயிகளின் பயிர் நிலையை அறிந்து மாறுபடும் வானிலைக்கு ஏற்றவாறு வானிலை முன்னறிவிப்பு மற்றும் வேளாண் ஆலோச னைகள் வட்டார வாரியாக வாரத்திற்கு 2 முறை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகளுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் வேளாண்மை அறிவியல் நிலையம் அளித்து வருகிறது.
இந்த அறிக்கையின் உதவியால் பருவமழை பொழி விற்கு ஏற்ப பயிர் விதைப்பு செய்யவோ அல்லது விதைப்பை தள்ளிப்போடவோ முடிவெடுக்கலாம். மேலும் நடவு, நிலம் தயாரித்தல், உரமிடுதல், நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் நேர்த்தி போன்ற மேலாண்மை உத்திகளை வேளாண் பணிகளில் முடிவெடுப்பதில் முன்னறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே உழவர் பெரு மக்கள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை பெறுவதற்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் வாட்ஸ்-அப் குழுவில் வேளாண் அறிவியல் மையத்தின் திட்டத்தை வழங்கக்கூடிய வெங்கடேசுவரியின் 95003 98922 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ்-அப் மூலம் குறை தீர்க்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
- குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சேவைகளில், மாவட்டத்திற்கு தேவை யான முக்கியமான அரசு சேவைகளின் தகவல்கள், இணையதள முகவரிகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அறிந்து பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதன்மு றையாக விருதுநகர் மாவட்டத்தில் ''விரு'' (VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 94884 00438 என்ற எண்ணிற்கு "HI" என்று அனுப்புவதன் மூலம் இந்த சேவையுடன் தொடர்பு கொண்டால், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சேவைகளான உங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய, வாக்காளர் பட்டியலில் நீக்கம், இடமா ற்றம், திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி பதிவு செய்ய என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
மேலும் மின்னணு வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய, உங்களுடைய வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ள, முதல்வரின் தனிப்பிரிவு-முதல்வரின் முகவரி, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிலவு டமை ஆவணங்கள் -பட்டா, சிட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம், இணையவழி சான்றிதழ் சேவைகள், முக்கிய உதவி எண்கள், அறிவிப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு, தமிழக அரசுத்துறைகளின் சமூக வலைதள பக்கங்கள், இணையதள முகவரிகள் என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
அந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான சேவையின் ஆங்கில வரிசை எழுத்தை உள்ளீடு செய்து தேர்ந்தெடுத்து பயன் பெறலாம். இந்த சேவையை பொதுமக்கள் 24 மணி நேரமும், எந்த இடத்தில் இருந்தும் தங்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை எண்ணை விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பயனாளிகள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்துள்ளனர். இந்த சேவையில் பொதுமக்கள் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்கும், அதற்கேற்றவாறு சேவை களை வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தரப்பட்ட பொதுமக்கள் இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
ஈரோடு:
கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உண்டாகி கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் அண்மையில் எச்சரிக்கை செய்து இருந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்த்(வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்- அப்பில் ஒரு தரப்பு சமூகத்தினரை பற்றி மிரட்டும் வகையில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த உதயநத்தம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக்கேயன், இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அசுமுதீன் (வயது 53) கூலி தொழிலாளி.
அசுமுதீனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இதனால் அசுமுதீன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததால் அவர்கள் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டில் அவர்கள் இருவரும் கணவன், மனைவிபோல வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது அதை அசுமுதீன் தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவர் இடையே பணத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பெண், அசுமுதீனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அசுமுதீன் அந்த பெண்ணுடன் தான் நெருக்கமாக இருந்த ஆபாச காட்சிகளை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது பற்றி அந்த பெண்ணிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போதுதான் அந்த பெண்ணுக்கு தனது அந்தரங்கம் அம்பலமானது தெரிய வந்தது. இதனால் அவர் இதுபற்றி கழக்கூட்டம் போலீசில் அசுமுதீன் மீது புகார் செய்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அசுமுதீனை கைது செய்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்