search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வசந்த்"

    • பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மும்பை தாராவி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஜோதி கெய்க்வாட் ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.


    மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையின் போது தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார்.

    • காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

    வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா நேற்று வயநாடு வந்தார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

     

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வயநாட்டில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் மானந்தவாடி காந்தி பார்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

     

    இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவிலில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சியில் பலர் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர், செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை பாராளுமன்ற காங்கிரஸ் பொருளாளரும், வர்த்தக காங்கிரஸ் மாநில தலைவருமான விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவிலில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் ஆரோக்கிய ராஜன், பொதுச் செயலாளர் பால் டேனியல், செயலாளர் கிங்ஸ்லின், துணைத்தலைவர் ராம் மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமன் லட்சுமணன், வர்த்தக காங்கிரஸ் ஆலோசகர் முகமது சாகுல் அமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     


    குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினவிழா நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

    குமரி தினத்தை முன்னிட்டு குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    • திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
    • கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி:

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் புகழை உலகமெங்கும் கொண்டு சென்றிடும் வகையிலும், அவருக்காக கன்னியாகுமரியில் கட்டப்பட்ட சிலையின் சிறப்பை பறைசாற்றும் வகையிலும், திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார். 



    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படும் நிலையில் உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செக்காரவிளையில் ரூ. 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்துவைத்தார்.
    • கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

    குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

    நெய்யூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கண்ணோடு 1-வது வார்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி 11.80 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தேன்.

    இதேபோல், கக்கோட்டுத்தலை ஊராட்சி செக்காரவிளை அருள்மிகு ஸ்ரீ வரப்பிரசாத விநாயகர் ஆலயம் அருகே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தேன் என பதிவிட்டுள்ளார்.


    இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்.

    ரெயில்வே துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் வசந்த் தனது தொகுதியில் கிடப்பில் உள்ள ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "இரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது."

    "இதில் நானும் ஒரு உறுப்பினராக தமிழகத்திற்கு, குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
    • பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    மார்த்தாண்டம் மேம்பாலம் மீண்டும் பழுதடைந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருடன் கலந்து கொண்டேன். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாற்று நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினேன்.

    கடந்தமுறை போன்று இம்முறையும் தற்காலிகமாக பணிகள் செய்து போக்குவரத்திற்கு பாலத்தை திறந்து விடுவதை தவிர்த்து, அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த பாலத்தினை பழுது பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

     அதுவரை பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட கமிட்டிகள் சார்பில் நாகர்கோவில், வேற்கிளம்பி மற்றும் குளச்சல் பகுதிகளில் நடைபெற்ற தேசிய விழிப்புணர்வு நடைபயணங்களில் கலந்து கொண்டேன்.

    • பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகின்றனர். இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள், பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால், ஆழ்கடலில் இவர்கள் தத்தளித்தனர்.


    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூயிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் படகு பழுதடைந்து, கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் கடலில் தத்தளிப்பதை அறிந்து, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமன் தூதரகத்தை தொடர்ப்பு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன்.

    அதன்படி அவர்கள் மீட்கப்பட்டு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்களது விசை படகும் இந்தியா வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன்.

    • புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
    • ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனியக்குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்றய தினம் அவரது தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

     

     

    மேலும் இன்று திக்கணங்கோடு சந்திப்பில் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பயணத்தை தொடங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Dr. பினுலால் சிங், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு. ராஜேஷ்குமார், சி.பி.எம் மாவட்ட செயலாளர் திரு செல்லசாமி, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராஜசேகரன், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.

     

     

    மேலும் நேற்றய திருவட்டாரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

     

    ×