search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹார்லி டேவிட்சன்"

    • மோட்டார்சைக்கிள்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
    • முந்தைய விலையை விட ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைவு ஆகும்.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பேன் அமெரிக்கா 1250 ஸ்பெஷல், ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மற்றும் நைட்ஸ்டர் போன்ற மாடல்களின் 2022 வெர்ஷன்களுக்கு தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 4 லட்சத்து 90 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலை குறைப்பின் படி இந்த மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 09 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த பைக் ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 51 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 லட்சத்து 06 ஆயிரம் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த பைக்கின் விலை ரூ. 4 லட்சத்து 45 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று நைட்ஸ்டர் மாடலின் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 லட்சத்து 69 ஆயிரம் என்று குறைக்கப்பட்டு இருக்கிறது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைவு ஆகும்.

    தற்போதைய விலை குறைப்பின் படி ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • புதிய மாடல்கள் ஹார்லி, குயிஜியாங் நிறுவனங்கள் கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இரண்டு மாடல்களும் லியோன்சினோ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் X350 மற்றும் X500 மோட்டார்சைக்கிள் மாடல்களை ஆஸ்திரேலிய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் இண்டர்செப்டார் 650, ஹோண்டா ரிபெல் 300 மற்றும் 500 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளன.

    புதிய ஹார்லி டேவிட்சன் X350 மற்றும் X500 மாடல்கள் ஹார்லி மற்றும் குயிஜியாங் நிறுவனங்கள் இடையேயான கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த இரண்டு மாடல்களும் லியோன்சினோ பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றின் ஃபிரேம், என்ஜின் என பல்வேறு பாகங்கள் ஒரேமாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    ஹார்லி X350 மாடலில் 353சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 36 ஹெச்.பி. பவர், 31 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஹார்லி டேவிட்சன் X500 மாடலில் 500சிசி பேரலல் டுவின் என்ஜின் உள்ளது. இந்த யூனிட் 47 ஹெச்.பி. பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் X440 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், புதிய X350 மற்றும் X500 மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. 

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் X440 மாடல் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது X440 மாடலின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. என்ட்ரி லெவல் மாடலான X440 விலை தற்போது ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் என்று அதிகரித்துள்ளது. இதன் டாப் என்ட் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம், ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் என்று மாறி இருக்கிறது.

    விவிட் என்று அழைக்கப்படும் மிட்-ரேன்ஜ் மாடலின் முந்தைய விலை ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று மாறி இருக்கிறது. இதன் S வெர்ஷன் விலை முன்னதாக ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் அனைத்து வெர்ஷன்களிலும் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    டெனிம் என்று அழைக்கப்படும் X440 மாடலின் பேஸ் வேரியன்டில் வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. விவிட் வேரியன்டில் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. S வெர்ஷனில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பிரீமியம் கனெக்டிவிட்டி மாட்யுல் மற்றும் இ-சிம் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் X440 மாடல்- ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு 400 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹார்லி டேவிட்சன் X440 மாடல் வினியோகம் அக்டோபர் 2023-ம் ஆண்டு துவங்கும் என்று தெரிகிறது.
    • புதிய X440 மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹார்லி டேவிட்சன் இந்தியா தனது X440 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமாக துவங்கியது. புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்பதிவு ஹார்லி டேவிட்சன் விற்பனை மையங்கள், ஆன்லைன் வலைதளம், தேர்வு செய்யப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான வினியோகம் அக்டோபர் 2023-ம் ஆண்டு துவங்கும் என்று தெரிகிறது.

     

    புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் உற்பத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீம்ரானா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் X440 மாடல் அந்நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஆயில், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் 2 வால்வு செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஆயில், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை மோட்டார்சைக்கிள் X440 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ஹார்லி டேவிட்சன் பிரான்டிங் செய்யப்பட்டு சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஃபிலாட் ஹேன்டில்பார், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், மெஷின்டு அலாய் வீல்கள், ரெட்ரோ ஸ்டைல் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த பேஸ் வேரியண்ட் சிங்கில் டோன் பெயின்ட் மற்றும் வயர் ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது. மிட் வேரியண்டில் அலாய் வீல் மற்றும் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    டாப் எண்ட் மாடலில் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 3டி லோகோ, ப்ளூடூத் மாட்யுல் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஆயில், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் 2 வால்வு செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹார்டுவேரை பொருத்தவரை X440 மாடலில் டிரெலிஸ் ஃபிரேம், 43mm அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க்குகள், கியாஸ் சார்ஜ், பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டுவின் ரியர் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு இரண்டு வீல்களிலும் சிங்கில் டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சைடு ஸ்டான்டு என்ஜின் கட்-ஆஃப் வசதி வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ஹார்லி டேவிட்சன் X440 பேஸ் மாடல் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் X440 மிட் வேரியண்ட் ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் X440 டாப் எண்ட் வேரியண்ட் ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ஹார்லி டேவிட்சன் X500 மாடலில் டியூபுலர் ஃபிரேம், 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
    • இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சீனாவை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான கியூஜெ மோட்டார் உடன் இணைந்து சர்வதேச சந்தையில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. இந்த கூட்டணியின் அங்கமாக X500 பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் ஆட்டோ ஷாங்காய் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹார்லி டேவிட்சன் X500 மாடல் பெனலி லியோன்சினோ 500 மாடல் உருவாகி இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் X500 மாடலும் டியூபுலர் ஃபிரேம் மற்றும் 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

     

    ஹார்டுவர் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் யுஎஸ்டி ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், டூயல் டிஸ்க் பிரேக், இருபுறமும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.

    இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி அமைத்து இருப்பதால், புதிய X500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது. எனினும், ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.
    • புதிய ஹார்லி எலெக்ட்ரிக் பைக் முழு சார்ஜ் செய்தால் 177 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது துணை பிராண்டு லைவ்-வயர் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு S2 டெல் மார் லாஞ்ச் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. தற்போது 2024 S2 டெல் மார் வெளியீடு மற்றும் விலை விவரங்களை லைவ்-வயர் அறிவித்து இருக்கிறது.

    புதிய S2 டெல் மார் மாடலின் விலை 15 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12.7 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடல் விலையை விட 1500 டாலர்கள் வரை குறைவு ஆகும். புதிய எலெக்ட்ரிக் பைக் வினியோகம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்க இருக்கிறது. அமெரிக்காவில் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

     

    புதிய டெல் மார் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 249 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 177 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும்.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய டெல் மார் மாடல் லெவல் ஒன் மற்றும் லெவல் டூ சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பில்ட்-இன் ஜிபிஎஸ், இண்டர்நெட் கனெக்டிவிட்டி, எல்இடி இலுமினேஷன் போன்ற வசதிகள் உள்ளன. புதிய லைவ்-வயர் S2 டெல் மார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2023 ஃபேட்பாய் 114 மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • புதிய ஃபேட்பாய் 114 விலை ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2023 மாடல்களை இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் ஃபேட்பாப் 114 மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஃபேட்பாய் 114 மாடலை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 விவிட் பிளாக் ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 பிரைட் பில்லியர்ட் புளூ ரூ. 24 லட்சத்து 68 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 கிரே ஹேஸ் மற்றும் சில்வர் ஃபார்சூன் ரூ. 25 லட்சத்து 19 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 ஹெர்லூம் ரெட் ஃபேட் ரூ. 25 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     

    புதிய மாடலில் சிங்கிள்-பாட் ஹெட்லைட், ரியர் ஸ்வெப்ட் ஹேண்டில்பார், ஃபியூவல் டேன்க் மீது மவுண்ட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், க்ரோம் சரவுண்ட்கள், ஸ்டெப்-அப் சீட், டுவின் பாட் எக்சாஸ்ட் கேனிஸ்டர் உள்ளது. இதுதவிர மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்ய ஏராளமான அக்சஸரீக்களை ஹார்லி டேவிட்சன் வழங்குகிறது.

    2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5.5 லிட்டர்கள் / 100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18.18 கிலோமீட்டர்) மைலேஜ் வழங்கும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 92.5 ஹெச்பி பவர், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    சஸ்பென்ஷனுக்கு ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளில் 49mm டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், அலுமினியம் ட்ரிபில் கிளாம்ப்கள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேகிங்கிற்கு முன்புறத்தில் ஒற்றை டிஸ்க், நான்கு பிஸ்டன் கொண்ட கேலிப்பர், பின்புறம் ஒற்றை ரோட்டார், இரண்டு பிஸ்டன்கள் கொண்ட ஃபுளோடிங் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர புதிய ஹார்லி ஃபேட்பாய் 114 மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த மாடலில் உள்ள கன்சோல் அனலாக் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஸ்கிரீனில் கியர், ஒடோமீட்டர், ஃபியூவல் லெவல், கடிகாரம், ட்ரிப், ரேன்ஜ் மற்றும் டக்கோமீட்டர் இண்டிகேஷன் போன்ற விவரங்களை காண்பிக்கிறது. 

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ஃபேட் பாப் 114 மோட்டார்சைக்கிள் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய ஃபேட் பாப் 114 சீரிசில் விவிட் பிளாக் நிறம் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் 2023 ஃபேட் பாப் 114 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஃபேட் பாப் 114 விலை ரூ. 20 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ப இந்த மாடலின் விலை வேறுப்படும்.

    2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 92.5 ஹெச்பி பவர், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5.5 லிட்டர் / 100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18.18 கிலோமீட்டர்) மைலேஜ் வழங்கும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து இருக்கிறது.

     

    புதிய ஃபேட் பாப் 114 மாடல்- விவிட் பிளாக், ரெட்லைன் ரெட் மற்றும் கிரே ஹேஸ் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் விவிட் பிளாக் நிற வேரியண்டின் விலை ரூ. 20 லட்சத்து 49 ஆயிரம் என்றும் ரெட்லைன் ரெட் மற்றும் கிரே ஹேஸ் நிற வேரியண்ட்களின் விலை ரூ. 20 லட்சத்து 68 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் அழகிய ஹெட்லைட் டிசைன், ஃபியூவல் டேன்க் மீது இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சாப்டு ரியர் ஃபெண்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட், டுவின் பாட் எக்சாஸ்ட், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் முன்புறம் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் டுவின் டிஸ்க் மற்றும் நான்கு பிஸ்டன்கள், பின்புறம் இரண்டு பிஸ்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் 13.2 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலின் மொத்த எடை 306 கிலோ ஆகும்.

    இந்திய சந்தையில் 2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் 114 மாடல் இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ், டிரையம்ப் ராக்கெட் 3, டுகாட்டி எக்ஸ் டயவெல், பிஎம்டபிள்யூ ஆர்18 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2023 பான் அமெரிக்கா 1250 மெக்கானிக்கல் மாற்றங்கள் இன்றி அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய மாடலில் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் பைக் மாடல்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்த ஹார்லி சமீபத்தில் 2023 பான் அமெரிக்கா அட்வென்ச்சர் டூரர் மாடலை அறிமுகம் செய்திருந்தது.

    இந்த வரிசையில், பான் அமெரிக்கா மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்டை நீக்கிவிட்டு இதற்கு மாற்றாக ஸ்பெஷல் வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் வேரியண்ட் பான் அமெரிக்கா 1250 மாடல் அலாய் வீல் அல்லது ஸ்போக் வீல்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் ஸ்போக் வீல் வேரியண்டில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை அலாய் வீல் வேரியண்டை விட ரூ. 1 லட்சம் அதிகம் ஆகும்.

     

    இவைதவிர 2023 பான் அமெரிக்கா 1250 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய சந்தையில் புதிய 2023 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மாடலின் விலை ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பான் அமெரிக்கா 1250 மாடலிலும் 1252சிசி, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 150.9 ஹெச்பி பவர், 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் லீன் சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், எலெகர்ட்ரிக் லின்க் செய்யப்பட்ட பிரேகிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் பிரேகிங் கண்ட்ரோல், ஐந்துவிதமான ரைடிங் மோட்கள், மூன்று கஸ்டமைஸ் செய்து கொள்ளும் ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் 2023 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மாடல் பிஎம்டபிள்யூ R 1250 GS, ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நைட்ஸ்டர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்தது.
    • நைட்ஸ்டர் சீரிஸ் ஸ்பெஷல் வேரியண்ட் இந்தியாவில் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் 2023 நைட்ஸ்டர் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நைட்ஸ்டர் சீரிஸ் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. 2023 நைட்ஸ்டர் சீரிஸ்- ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்பெஷல் வேரியண்டில் ஹெட்லைட் கௌல், பில்லியன் சீட், உயரமான ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஸ்பெஷல் வெர்ஷன் அதிக நிற ஆப்ஷன்கள் மற்றும் வித்தியாச டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடல்- விவிட் பிளாக் மற்றும் ரெட்லைன் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. நைட்ஸ்டர் ஸ்பெஷல் மாடல்- விவிட் பிளாக், பிளாக் டெனிம், பிரைட் பில்லியர்ட் புளூ மற்றும் இண்டஸ்ட்ரியல் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     

    இரண்டு வேரியண்ட்களிலும் விவிட் பிளாக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மற்ற நிற வேரியண்ட்களின் விலை ரூ. 14 ஆயிரம் வரை அதிகம் ஆகும். மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2023 ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் சீரிசில் 975சிசி, வி-டுவின், லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 88.5 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 5.5. லிட்டர் /100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18 கிலோமீட்டர்) வரை செல்லும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஷோவா முன்புற ஃபோர்க்குகள், டுவின் ஸ்ப்ரிங்குகள், இரண்டு வீல்களிலும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ரோட், ரெயின், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்டு நைட்ஸ்டர் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் என்றும் நைட்ஸ்டர் ஸ்பெஷல் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 29 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புதிய X 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
    • புதிய ஹார்லி பைக் சீனா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புதிய எண்ட்ரி-லெவல் X 350 மோட்டார்சைக்கிளை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. சீனாவை சேர்ந்த QJ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஹார்லி X 350 மோட்டார்சைக்கிள் விவரங்கள் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் சீன வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

    தோற்றத்தில் புதிய X 350 மாடல் ஸ்போர்ட்ஸ்டெர் XR1200X போன்றே காட்சியளிக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் நிறுத்தப்பட்டு விட்டது. ஹார்லி X 350 மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், சிங்கில்-பாட் கன்சோல் கொண்டிருக்கிறது. இத்துடன் டியர் டிராப் வடிவ டேன்க் உள்ளது. இந்த மாடலின் முழு அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

     

    எனினும், இதில் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஹார்லி டேவிட்சன் X 350 மாடலில் 353சிசி, இன்லைன் டுவின் சிலிண்டர் என்ஜின் மற்றும் லிக்விட் கூலிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 36.2ஹெச்பி பவர், 31 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

    புதிய X 350 மாடலில் பிரீமியம் பாகங்கள் உள்ளன. இந்த மாடல் 17 இன்ச் அலாய் வீல்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் யூனிட் கொண்டிருக்கிறது. பிரேகிங்கை பொருத்தவரை முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் சிங்கில் ரோட்டார் மற்றும் பிஸ்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சீன சந்தையில் புதிய ஹார்லி டேவிட்சன் X 350 மாடலின் விலை 33 ஆயிரத்து 388 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 93 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹார்லி டேவிட்சன் X 350 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    ×