என் மலர்
நீங்கள் தேடியது "Yogi Adityanath"
- 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியுடன் நிறைவு பெற்றது.
- 66 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா விழா கடந்த மாதம் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட குவிந்தனர்.
45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியான நேற்று இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இந்த 45 நாட்களும் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பக்தர்களின் அலைமோதிய கூட்டத்தால் பிரயாக்ராஜ் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் மகா கும்பமேளா விழா முடிவடைந்ததையொட்டி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து பிரயாக்ராஜ் சென்றார். அங்கு கங்கை நிதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
பின்னர் அவர் பேசும்போது பிரயாக்ராஜ் மக்களை பெரிதும் பாராட்டினார். மகா கும்பமேளா குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
எந்தவொரு தயக்கம், சிரமமின்றி கும்பமேளா விழாவை தங்கள் வீட்டி விழாவாக கருதிய பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய உபசரிப்பு பாராட்டுக்குரியது.
மகா கும்பமேளா விழா சுமூகமாக நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் சிறப்பான முறையில் மகா குமப்மேளா நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. சாதுக்கள் உள்பட 66 கோடி பக்தர்கள் புனித சங்கமத்தில் நீராடினர்.
பிரயாக்ராஜ் மேளா ஆணையம், நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சரியான ஆதரவும் இருந்தால், எந்த முடிவையும் அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அதன் விளைவு இன்று இந்த வடிவத்தில் நம் முன் வந்துள்ளது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
- கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்- யோகி ஆதித்யநாத்
- துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா?- அகிலேஷ் யாதவ்
மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றன. நாளையுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.
கடந்த மாதம் மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக உத்தர பிரதேச அரசு தெரிவித்தது. ஆனால் உயிரிழந்தவர்கள் அதிகம். உண்மையான எண்ணிக்கைகை மாநில அரசு வெளியிட மறுக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பின.
இதற்கிடையே உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் "கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் யோகி ஆதித்ய நாத் கழுகுகள் எனக் கூறியதற்கு அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களுடைய அன்பானவர்களை தேடிக்கொண்டிருக்கும் நபர்களை அவமதித்துள்ளார் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தற்போது கூட, ஏராளமான மக்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் இழந்த தங்களுடைய சகோதரர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என அன்பானவர்களை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில மாயமாகியுள்ளனர்.
துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருக்கும் ஒருவரின் உணர்வின்மையின் உச்சக்கட்டம் இது.
மிகப்பெரிய அளவிலான துயர சம்பவம் நடைபெற்ற போது, முதலமைச்சர் நடத்திய ஆய்வு என்ன?. மகா கும்பமேளாவில் நடைபெற்ற உயிரிழப்புகள் மற்றும் குழப்பங்கள் யோகி ஆதித்யநாத் அரசின் தோல்விக்கு ஆதாரம்.
லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள பாஜக அரசாங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இப்போது பிரயாக்ராஜில் கங்கை நீரின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள் மோதிக் கொள்வதைக் காண்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
- சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம், ஏனென்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ராகிணி சோங்கரின் கேள்விக்கு பதில் அளித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
இந்தியா ஒருபோதும் வளர்ந்த நாடாக மாற முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
2027-ம் ஆண்டில் அதைவிட உயர்ந்த நிலைக்கு இந்தியா செல்லும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்காக 140 கோடி இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம், ஏனென்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த (இந்திய மதிப்பில் சுமார் ரூ.86 லட்சம் கோடி) கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக 10 துறைகளில் திட்டங்களை வகுத்துள்ளோம்.
தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வால் மாநிலத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்.
இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரபிரதேச சட்டசபையில் பேசிய யோகி ஆதித்யநாத், "இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் புராண கால நதியான சரஸ்வதி ஒன்றாக கலக்கும் திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. சனாதன தர்மம், கங்கை நதி, இந்தியாவுக்கு எதிரானவர்கள் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போன்றது" என்று தெரிவித்தார்.
- அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகில் சென்றார்.
- கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது வருகை தந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
இந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று பிரயாக்ராஜ் சென்றுள்ளார். மோடியின் 'தனி விமானம்' பாம்ராலி விமான நிலையத்தை அடைந்தது.
அங்கே ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இரு துணை முதல்வர்களும் அவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டிபிஎஸ் ஹெலிபேடை மோடி வந்தடைந்தார்.
இங்கிருந்து வாகனம் மூலம் விஐபி காட் பகுதியை அடைந்தார். அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகு மூலம் ஏரியல் கோட் பகுதியை சென்றடைந்த பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
#WATCH | Prime Minister Narendra Modi takes a holy dip at Triveni Sangam in Prayagraj, Uttar Pradesh (Source: ANI/DD) #KumbhOfTogetherness #MahaKumbh2025 pic.twitter.com/kALv40XiAH
— ANI (@ANI) February 5, 2025
தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி கும்பமேளாவில் புனித நீராடி உள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்ததாகப் பக்தர்களுடன் மோடி உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மகா கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது.
- உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் 22 வயதான இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 30-ந்தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் காலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், எலும்புகள் முறிந்து இருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலித் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்படடு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்காள மாநில ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது. 22 வயது இளம் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் பாஜக இதுவரை மவுனமாக உள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?. தலித் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் வேறுவிதமாக பார்க்கிறீர்கள். பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு வாக்குறுதி வெற்று வார்த்தைகளாகவே உள்ளன.
இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
- யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.
- சிறந்த சிகிச்சை அளிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்றவர்களை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.
மேலும், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் பேசிய அவர், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 29-ம் தேதி அதிகாலை மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறு யோகி ஆதித்யநாத் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத் வருகைக்கு முன், உத்தர பிரதேச தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி.ஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார்.
- முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் நேற்று (புதன்கிழமை) அதிகாலை மகா கும்பமேளாவின் சங்கம் பகுதியில் குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகை தந்ததை அடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்த நிலையில், பல மணி நேரம் கழித்து, மகா கும்பமேளாவின் டி.ஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார்.
"ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரித்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது. மேலும், கூட்டத்தினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபுறம் குதித்து, அங்கிருந்தவர்களையும் நசுக்கியது. கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் உயிரிழந்தனர்," என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார். அவர்களில் நான்கு பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் அசாம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மீதமுள்ளவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஏழரை கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று (புதன்கிழமை) நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெரிசலில் தங்கள் குடும்ப உறவுகளை இழந்த பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, இந்த சோகம் "மிகவும் வருத்தமளிக்கிறது" என்று விவரித்தார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கூட்ட நெரிசலுக்கான காரணங்களை ஆராய நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் டி.ஜி. வி.கே. குப்தா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். வி.கே. சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை நியமித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
- கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் மவுனி அமாவாசை வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில் ஏராளமான மக்கள் புனித நீரான திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கங்கா, யமுனா, சரஸ்வதி (மாயநதி) சங்கமிக்கும் திரிவேணியில் இதுவரை 14.52 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடியுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் மையம் கொண்டனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தினமும் இயக்கப்படும் ரெயில்கள், 24 சிறப்பு ரெயில்கள், விமானம் மற்றும் கார்கள் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அங்கு சென்று, புனித நீராடி உள்ளனர்.
பக்தர்கள் குளிப்பதற்காக 25 இடங்களில் படித்துறை அமைக்கப்பட்டு உள்ளன. நதியின் மறு கரைக்கு செல்வதற்கு நடுவில் இரும்பால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாலைகள் இல்லாத பகுதிகளில் தற்காலிகமாக இரும்பை பயன்படுத்தி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் மவுனி அமாவாசை வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில் நீராடுவது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் இந்த மவுனி அமாவாசை, பண்டிகை போல் கொண்டாடப்படுகிறது.
மவுனி அமாவாசையான இன்று மகா கும்பமேளாவில் ஏராளமான மக்கள் புனித நீரான திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
போலீசாரின் தடுப்புகளை மீறி அதிகாலையிலேயே புனித நீராட முயன்ற பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரயாக்ராஜில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போதைய கள நிலவரம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரு மணி நேரத்தில் 2-வது முறையாக பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். மகா கும்பமேளா நிலைமையை அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
- மகா கும்பமேளாவில் சாதி, மத ரீதியிலான எந்த பாகுபாடும் இல்லை.
- சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள், இதை நேரடியாக வந்து பாருங்கள்.
சனாதன் தர்மம் தான் இந்தியாவின் தேசிய மதம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் , பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் சாதி, மதம் பார்க்காமல் கிட்டத்தட்ட ஆறு கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள். இங்கு எந்த பாகுபாடும் இல்லை. சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள், இதை நேரடியாக வந்து பாருங்கள்.
சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். இது மனிதநேயத்தின் மதம். இங்கு வழிபாட்டு முறைகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் மதம் ஒன்று தான். அந்த மதம் தான் சனாதன தர்மம்" என்று தெரிவித்தார்.
மகாகும்பத்தின் முதல் 14 நாட்களில் 11 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜின் புனித நீரில் புனித நீராடியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- அவர் தனது அமைச்சர்களுடன் யமுனையில் சென்று குளிக்க முடியுமா?
- கெஜ்ரிவாளுக்கு சவால் விடுத்த யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்
டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைப் பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை நிலவி வருகிறது.
கெஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோர் தத்தமது கட்சிகளுக்காகச் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜக அண்டை மாநிலமாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டெல்லி களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
டெல்லியின் கிராரி பகுதியில் தனது முதல் பேரணியில் நேற்று உரையாற்றிய யோகி ஆதித்யநாத், " ஒரு முதலமைச்சராக நானும் எனது அமைச்சர்களும் பிரயாக்ராஜில் [மகா கும்பமேளா] [திரிவேணி] சங்கத்தில் நீராட முடிந்தது.

அதே போல டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கேட்க விரும்புகிறேன், அவர் தனது அமைச்சர்களுடன் யமுனையில் சென்று குளிக்க முடியுமா? என்று சவால் விடுத்தார். புனித யமுனையை அழுக்கு வாய்க்காலாக மாற்றி கெஜ்ரிவால் பாவம் செய்துள்ளார் என யோகி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவாளுக்கு சவால் விடுத்த யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மற்றவர்களுக்கு சவால் விடுபவர்கள் தங்கள் மாநிலத்தில் [உத்தரப் பிரதேசத்தில்] உள்ள மதுரா வழியாக பாயும் யமுனை நீரை குடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் .

கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் யமுனை முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. அதன் கடுமையான மாசுபாடு காரணமாக அதை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகிறது.
முன்னதாக கெஜ்ரிவால் யமுனையை சுத்தம் செய்யவும், நதிகளின் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கவும் பல வாக்குறுதிகளை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

- அரசியல் நிகழ்வுகளுக்கு கும்பமேளா சரியான இடம் அல்ல.
- வக்பு நிலத்தை அபகரிப்பதே பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது 54 மந்திரிகளுடன் கங்கையில் புனித நீராடினார். மகா கும்பமேளாவையொட்டி யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு சமாஜ்வாடி கட்சி தலைவரும், உ.பி.முன்னாள் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அரசியல் நிகழ்வுகளுக்கு கும்பமேளா சரியான இடம் அல்ல. அரசியல் செய்தியை வழங்க பா.ஜ.க. அரசு அங்கு மந்திரிசபை கூட்டத்தை நடத்துகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வினர் மாபியாவாக செயல்படுகின்றனர். வக்பு நிலத்தை அபகரிப்பதே பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருக்கிறது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.