search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appropriate action"

    • அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும்
    • கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பள்ளியில் இருந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    மற்ற அரசு பள்ளிகளில் இருப்பது போல் இந்த அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதிலளித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து தெள்ளூர் ஊராட்சி, வீராரெட்டிபாளையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, சரவணன், ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி தலைவர் தேவிசுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • உதவி ஆணையர் (கலால்) சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 517 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறு த்தப்பட்டனர்.

    மேலும்,முதல்-அமை ச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமே ஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு இயக்க திட்ட அலுவலர் காஞ்சனா, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், உதவி இயக்குநர் நில அளவைகள் மற்றும் பதிவேடுகள்துறை சீனிவாசன், உதவி ஆணையர் (கலால்) சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×