search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank accounts frozen"

    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
    • கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 20 பேரின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளது

    கோவை,

    தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்து உள்ளது.

    இதனை மீறி சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் சூலூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளது. தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டுள்ளது. விரைவில் வழக்குகள் முடிந்து தண்டனை கிடைக்கும் வகையில் போலீஸ்துறை செயல்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 20 பேரின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளது. தற்போது ஓரளவுக்கு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்பவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×