என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Benefits of midday nap"
- நல்ல தூக்கம் நாள் முழுவதும் சக்தியை நமக்கு உதவும்.
- உற்சாகமாகவும், நேர்மறை மனநிலையுடனும் அணுக உதவும்.
அலுவலகமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி மதிய உணவை சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே நாம் மிகவும் மந்தமாகவும், சோர்வாக இருப்பதை போலவும் உணர்வோம். தொடர்ந்து கொட்டாவி வந்து தூக்கம் லேசாக கண்களை தழுவும், அப்படியே படுத்து ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை குட்டி தூக்கம் போடலாம் என்ற ஆவல் எழும். ஆனால் பலரும் மதிய நேரத்தில் தூங்குவது ஆரோக்கியத்திற்கு தீமை என்று நினைக்கிறார்கள்.
இரவு தூக்கம் போல பகலிலோ அல்லது மதியத்திலோ நீண்ட நேரம் தூங்கினால் ஒருகட்டத்தில் நிச்சயம் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது ஒரு வகையில் உண்மை தான். ஆனால் மறுபுறம் மதிய நேரங்களில் சில நிமிடங்கள் மட்டுமே தூங்கி எழும் குட்டி தூக்கம் என்பது ஆரோக்கியமானது மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா...?
மதிய உணவுக்குப் பிறகான ஒரு சிறிய தூக்கம் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை சில ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. ஒரு சிறிய மற்றும் நல்ல தூக்கம் நாள் முழுவதும் சக்தியை நமக்கு உதவும். மேலும் சிறிது நேர மதிய தூக்கம் நாள் முடியும் வரை போதுமான சக்தியை அளிக்கவும் உதவும்.
மதியம் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:
பலரும் இரவு நேரத்தில் போதுமான அளவு தூங்குவதில்லை. போதுமான தூக்கம் இல்லாதது அல்லது சோர்வு மனநிலை உள்ளிட்டவை ஒருவரின் உணர்ச்சி ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். சிறிதுநேர பிற்பகல் தூக்கம் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், உற்சாகமாக இருக்கவும் உதவும்.
தவிர எப்போது பார்த்தாலும் எரிச்சல் மற்றும் கடுகடுப்புடன் இருக்கும் மனநிலையை குறைக்கவும், பொறுமையாக இருப்பதை அதிகரிக்கவும் உதவுகிறது. பிசியான நாட்களிலும் கூட சிறிது நேர மதிய தூக்கத்திற்கு நேரம் ஒதுக்குவது உங்களது மனநிலையை புத்துணர்ச்சியாக மாற்றி, அந்த நாளின் மீதமுள்ள நேரத்தை உற்சாகமாகவும், நேர்மறை மனநிலையுடனும் அணுக உதவும்.
நேப்பிங் எனப்படும் மதிய நேர குட்டி தூக்கம் நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் உள்ளிட்ட பல அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக நாம் தூங்கும் போது நம்முடைய மூளை தகவல்களை ஒருங்கிணைத்து புராசஸ் செய்கிறது. இது தகவல்களை நினைவுப்படுத்துவதையும், தக்கவைப்பதையும் நமக்கு எளிதாக்குகிறது.
மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்குவது மந்த உணர்வு மற்றும் தூக்க கலக்கத்துடன் போராடுவதை தவிர்க்க உதவுகிறது. இதன்மூலம் உற்பத்தித்திறன் மேம்படும். எனவே மதிய நேரத்தில் சுமார் 20-30 நிமிடங்களுக்கு ஒரு குட்டி தூக்கம் தூங்கியெழுவது விரைவான ஆற்றலையும், மனதிற்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
மேலும் இந்த தூக்கம் நாளின் மீதமுள்ள நேரத்தில் உங்களை அதிக கவனத்துடன் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க உதவும். மதிய உணவிற்கு பிறகு எப்படி தூங்க வேண்டும்? மதிய உணவிற்கு பிறகு தூங்க வேண்டும் என்றால் உங்களின் இடது ஒருக்களித்து படுத்து தூங்கலாம். இப்படி படுப்பது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
எவ்வளவு நேரம் தூங்கலாம்?
சாதாரண நபர்கள் 10 நிமிடங்கள் முதல் - 30 நிமிடங்கள் வரை பிற்பகல் தூங்கலாம். அதேநேரம் மிகச்சிறிய வயது குழந்தைகள், மிகவும் வயதானவர்கள், மிகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் சுமார் 90 நிமிடங்கள் தூங்கலாம்.
எந்த நேரத்தில் தூங்கலாம்?
குட்டி தூக்கம் தூங்கி எழ உகந்த நேரம் மதியம் 1 முதல் 3 மணிக்குள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்