search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomi Pooja"

    • தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
    • ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், வீட்டிலிருந்து புறப்படும் தமிழக வெற்றிக் கழக தொண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டகளை விடுத்துள்ளார்.

    இதுவரை நூற்றுக்கணக்கான வானங்களின் ஆவணங்கள் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.

    மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வானங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.

    மேலும், மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆணை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    விழாவுக்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட ஏழுஎருமை பள்ளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ். ரூ.45.60 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி என்ற குமரேசன் தலைமை வகித்தார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக பங்கே ற்றார். காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி 1- வது வார்டு யூகேசி. நகர் பகுதி முதல் அப்துல் ஜாபர் வீடு வரை 115 மீட்டர் அளவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரிய கோட்டை முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன் , பெரிய கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் இளம்பிறை சாதிக், செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஜாஹிர் உசேன் , பெரிய கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
    • விஜயநகரம் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் ரூ.5.60 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள் கட்ட பூமி பூஜை போட்டப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஐ.டி.சி நிறுவனம், கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் வெள்ளியங்காடு ஊராட்சியில் ஆதிமாதையனூர் கிராமத்தில் ரூ.7.49 லட்சம் மதிப்பிலும், பங்களா மேடு பகுதியில் ரூ.8.78 லட்சம், கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் மேடூர் பகுததியில் ரூ.8.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிவறைகள் திறப்பு விழாவும், சாலைவேம்பு அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளயில் ரூ.4.90 லட்சம் மதிப்பில், விஜயநகரம் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் ரூ.5.60 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள் கட்ட பூமி பூஜை போட்டப்பட்டது.

    இதற்கு ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். தேக்கம்பட்டி ஐ.டி.சி பி.எஸ்.பி.டி தொழிற்சாலை தலைமை பொறுப்பாளர் வெங்கட்ராவ், நிர்வாக தலைவர் மகிந்தர்பாபு, கிராமிய அபிவிருத்தி இயக்க தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் காரமடை ஊராட்சி ஒன்றியக்குக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன் ஊராட்சி தலைவர்கள் ஜெயமணி (வெள்ளியங்காடு), செல்வி நிர்மலா (கெம்மாரம்பாளையம்) உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமிய அபிவிருத்தி இயக்க மேலாளர் அபிநந்தன் செய்திருந்தார்.

    • நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டது.
    • பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி பகுதியில் தார் சாலை மற்றும் உரக்கடங்கு உள்ளிட்ட ரூ.46 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாபபு கண்ணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் முன்னிலை வகித்தார். அப்போது திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்து கூறியதாவது:-தாராபுரம் நகராட்சி பகுதியில் சுமார் 40ஆண்டு காலமாக முடிக்கப்படாத குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை திமுக., அரசு பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பணியில் முழு முயற்சியில் இப்பணிகளை நிறைவேற்றியதுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    அதில் அலங்கியம் சாலை முதல் உடுமலை சாலைவரை ரூ.16 லட்சம் மதிப்பில் தார்சாலையும்,அரசமரம் பகுதியில் ரூ.6லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பித்தல்,நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.இதன் அனைத்து பணிகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    நிகழ்ச்சியின் போது தி.மு.க., நகர செயலாளர் எஸ். முருகானந்தம், பொறியாளர் சண்முக வடிவு,மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர், நகரத் தலைவர் கதிரவன், நகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, புனிதா, கமலக்கண்ணன், துரை சந்திரசேகர், சீனிவாசன் முத்துலட்சுமி,தேவி அபிராமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிரா மத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதி யை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஈமச் சடங்குகள் செய்து வருகின்றனர்.
    • அங்கு செல்வதற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதியை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஈமச்சடங்கு கள் செய்து வருகின்றனர். அங்கு செல்வ தற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்கு நேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கை யை ஏற்று இன்று ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்ப தற்கான பூஜை செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர், இந்த மாத இறுதிக்குள் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. அந்த கிரா மத்தில் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிக ளையும் ஆய்வு செய்துள்ளோம் என்றார். அப்போது செண்பக ராம நல்லூர் பஞ்சாயத்து தலை வர் முருகம்மாள், தி.மு.க. அவைத்த லைவர் செல்ல த்து ரை, நிர்வா கிகள் விநாயகம், மாடசாமி, அனுமார், புதுக்கு ளம் சிவா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாக பணிகள் நடைபெற உள்ளது.
    • பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில், 15-வது பொது நிதிக்குழு மானிய திட்ட நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சபரி நகரில் கான்கிரீட் சாலை அமைத்தல், எம். ஏ. நகரில் புதிய தார் சாலை அமைத்தல், அய்யாவு நகரில் கப்பி சாலை அமைத்தல், மீனாம்பாறை மயான சாலை, அவரப்பாளையும் இணைப்பு சாலை, உதயம் நகரில் கழிவு நீர் கால்வாய், எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாகம், உள்ளிட்ட பணிகள் ரூ.1.66 கோடியில் நடைபெற உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி. பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
    • அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் சக்தி நகர், ஜோதி நகர் ,லட்சுமி நகர், கங்கா நகர் அமரஜோதி கார்டன் உள்ளிட்ட இடங்களில் 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.47.39 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அவர் அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில்,பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில், கணபதிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் முருகன், கதிஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், ரவி தண்டபாணி, கோவிந்தம்மாள், செல்வராஜ்,ஜெயலட்சுமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் கட்டிடப்பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் அமைக்க ரூ. 20 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் சபுரா சலீமா, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார்பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமிஅந்தோணி, முன்னாள் நகரச் செயலாளர் இஸ்மாயில், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் வக்கீல் மாரியப்பன் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஷேக் தாவுது, பூலையா, சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார்.

    குண்டடம் :

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு கத்தாங்கண்ணி ஆதிதிராவிடர் காலனி முதல் பேரூராட்சி எல்லை வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மீனாகவுரி முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×