search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Siddaramaiah"

    • கூட்டத்தில் அமர்ந்திருந்த நபர் திடீரென மேடையை நோக்கி ஓடினார்.
    • மேடை அருகே சென்றதும் முதல்வர் சித்தராமையாவை நோக்கி ஓட முயன்றார்.

    கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஜனநாயக தினம் கொண்டாட்ட விழா நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள விதான் சவுதா முன்பு இந்த நடந்தது. இதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்தார். இதே மேடையில் முதல்வர் சித்தராமையா இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது கூட்டத்தில் முன் பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீரென மேடையை நோக்கி ஓடினார்.

    மேடை அருகே சென்றதும் முதல்வர் சித்தராமையாவை நோக்கி ஓட முயன்றார். இதை கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த நபரை தடுத்தனர். பிறகு பாதுகாவலர்கள் அந்த நபரை குண்டுகட்டாக இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

    முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை மீறி நபர் ஒருவர் சித்தராமையாவை நோக்கி ஓடிய சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. எனினும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் மகாதேவ் நாயக் என்பதும், அவர் முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது. முதலமைச்சருக்கு சால்வை அணிவிக்கும் முயற்சியில்தான், அவரை அணுக முயற்சி செய்தாக அந்த நபர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 



    • இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.
    • அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-

    இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.

    கர்நாடகாவிற்கு மோடியின் பரிசு வெற்றுச் சொம்பு. ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்கள். செய்தார்களா? வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினார்களா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கினார்களா? நல்ல நாட்கள் வந்ததா?. ஒரு சிங்கிள் உறுதியை கூட நிறைவேற்றவில்லை.

    ஆகவே, மோடி மாநில மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு வெற்று சொம்பை கொடுத்துள்ளார். அவர்கள் ஏதும் செய்யவில்லை. இருந்தபோதிலும் நம்முடைய மாநில கஜானா காலியாகவில்லை. நம்முடைய காங்கிரஸ் கட்சி ஐந்து உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முன்னேற்றத்திற்கான பணிகளை தொடர்கிறோம். மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத கட்சி. அவர்களில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது மூலம் கட்சியை கலைத்து விடுவது நல்லது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    ×