என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Complain to the police"
- பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48), விவசாயி. இவரது மனைவி ராணிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார்.
இதனால் தாமோதரன் விவசாய நிலத்தை கவினித்துக்கொண்டு வீட்டிற்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். ராணிக்கு சிகிச்சை முடித்து சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பீரோவை திறந்து பார்க்கும் போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட் 16 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தாமோதரன் ஆரணி தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில் நான் ஊரில் இல்லாததால் கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
- போலீசார் தேடி வருகின்றனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி. இவருடைய 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மாணவி அதிகாலை மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர்.
அவர் கிடைக்காததால் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தனர். இதேபோல் தூசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தூசி போலீசில் புகார் அளித்தனர். இந்த இரு சம்பவங்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி, இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார்
- உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி ஷாமிலா (வயது 26) என்கின்ற மனைவியும் தியாஸ்ரீ (வயது 5), ஜெயசுகன் (வயது 1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
அப்போது நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மனைவி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை.
இதனால் கார்த்திக் தனது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனால் கார்த்திக் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல குப்பம் கொள்ளை மேடுவை சேர்ந்தவர் கோபி (வயது 53). விவசாயி.
கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷ குளவி கோபியை கொட்டி உள்ளது. வலியால் அலறி துடித்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் வாணியர் வீதியில் நேற்று ஒரு கோவில் திருவிழா வையொட்டிசாமி ஊர்வலம் நடந்தது. அப்போது வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பவருக்கும், ஞானவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைப்பார்த்த அதேபகு தியை சேர்ந்த ராஜேஷ் (20), அரவிந்த் (21), கார்த்திகேயன் (29) ஆகியோர் தடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் கத்தியை எடுத்து, ராஜேஷ், அரவிந்த் ஆகியோரை குத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் கார்த்திகேயனையும் தாக்கி உள்ளார். காயமடைந்த அவர் கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பஜனைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). இவர் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்து அலுவலகம் பணிகளை கவனித்தார். அப்போது மதிய வேலையில் அலுவலகத்திற்கு வந்த பெரியகிராமம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (36)லாரி டிரைவர். இவர் உதவியாளர் மாரிமுத்துவிடம் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆவேசம் அடைந்த லாரி டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வெட்ட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உதவியாளர் மாரிமுத்து தடுத்து கத்தியை பிடுங்கி கிழே போட்டுள்ளார்.
ஆனால் ஆவேசம் அடங்காத லாரி டிரைவர் மாரிமுத்துவின் இடது கையை பிடித்து கடித்து உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்.
இதுதொடர்பாக உதவியாளர் மாரிமுத்து நேற்று இரவு காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோவில் டியூசன் மாஸ்டர் கைது
- ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
வேலூர் அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மீர் பஹார் அலி (வயது 53). என்பவரிடம் மாணவி டியூஷன் படித்து வந்தார்.
இந்த நிலையில் டியூஷனுக்கு வந்த மாணவியிடம் மீர் பஹார் அலி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வாசுகி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மீர் பஹார் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.
- மர்ம நபர் கைவரிசை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மழையூர் கூட்டு சாலையை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் அவர் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் மகாதேவனின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து மகாதேவன் வட வணக்கம் பாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- 10-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் தேடி வருகின்றனர்
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து இவரது தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
- ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்
- 4 பேர் கைது
வேலூர்:
ஊசூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 34). இவர் அரியூரில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத் தன்று விடுதிக்கு ஆட்டோ வில் 4 பேர் வந்தனர். விடுதிக்குள் புகுந்த அவர்கள் பணம் கேட்டு அருளை மிரட்டினர்.
அவர் பணம் இல்லை என்று கூறியதால் கத்தியை காட்டி மிரட்டி, அவரை தாக்கி ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரிடம் பணத்தை பறித்துச் சென்றது, அரியூரை சேர்ந்த அப்பு என்ற ரோஹித்குமார் (33), சுரேஷ்பாபு (37), சிவக்கு மார் (33), லோகேஷ் (23) ஆகி யோர் என்பது தெரியவந்தது.
அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சதீஷின் மனைவி வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலப்பாடி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை, சந்துரு, முனீஸ், ஆகாஷ், விஜய், ராமு மற்றும் சதீஷ் மனைவி ஆகியோர் சேர்ந்து கைகளால் தாக்கியதுடன், பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்து இளம்பெண் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனீஸ் மற்றும் சதீஷ் மனைவி ஆகிய 2 பேரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- பழைய சூரமங்கலம் சோழம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி.
- அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
சேலம்:
சேலம் பழைய சூரமங்கலம் சோழம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் கவுரி பானு(வயது23). சம்பவத்தன்று வீட்டை விட்டுச் சென்ற இவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கவுரி பானு எங்கு சென்றார்? அவர் யாரும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்