என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cyclone Mocha"
- காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.
வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று முன்தினம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.
மோக்கா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு ஆதரவு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ரக்கினே மாநிலத்தில் மட்டும் 41 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
- வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது.
- இதனால் வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
டாக்கா:
வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முன்னதாக மோக்கா புயல் காரணமாக இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்
- வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் அதி தீவிரமடைந்துள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் அதி தீவிரமடைந்துள்ளது. அது, மே 14-ந் தேதி நண்பகல் மியான்மர் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. அதாவது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் மே 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி நகரக்கு வெளியே பாளை சாலையில் புழுதியுடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத புழுதிக்காற்று வீசியது.
- சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த சூறாவளி காற்று ஓய்ந்து பின்னர் மீண்டும் இயல்புநிலை திரும்பியது.
தூத்துக்குடி:
வங்கக்கடலில் உருவாகி உள்ள மோக்கா புயல் வருகிற 14-ந்தேதி கரையை கடக்கிறது.
இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் புயல் எச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மொக்கா புயல் தீவிர புயலாக மாறியதால் நேற்று 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் அதேநிலையில் நீடிக்கிறது.
தூத்துக்குடியில் நேற்று பகலில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிற்பகலில் கடுமையான வெயில் வாட்டியது.
மாலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக தூத்துக்குடி நகரக்கு வெளியே பாளை சாலையில் புழுதியுடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத புழுதிக்காற்று வீசியது. வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக திண்டாடினர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தினர். சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த சூறாவளி காற்று ஓய்ந்து பின்னர் மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
தொடர்ந்து மாலையில் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்று காலை ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14-ந் தேதிவரை செல்ல வேண்டாம்.
சென்னை:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வு மையம் 11-ந் தேதி (நேற்று) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இதற்கு 'மோக்கா' என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியை கடந்து, 13-ந் தேதியன்று சற்று வலுவிழந்து, 14-ந் தேதியன்று மணிக்கு 120 முதல் 145 கி.மீ. வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை ஆணையருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14-ந் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 14-ந்தேதி மோக்கா புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும்.
- புயல் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
சென்னை:
வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து வருகிற 14-ந்தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புயல் எச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இது புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதற்காக ஏற்றப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது என்று துறைமுக அதிகாரிகள் கூறினார்கள்.
- வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
- மோக்கா புயல் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் உருவானது. நேற்று முன்தினம் இரவு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
நீண்ட நேரமாக அந்த காற்றழுத்தம் அதே பகுதியிலேயே நிலைக்கொண்டு இருந்தது. பிறகு அது மெல்ல வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியது.
அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் முதல் வலுவடைய தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை அது புயலாக மாறியது. அந்த புயலுக்கு மோக்கா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புயலாக மாறிய பிறகு அது சற்று வேகமாக நகர தொடங்கி உள்ளது. தொடர்ந்து அந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நாளை அதன் நகரும் திசையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள அந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) அது அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அது வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.
தற்போது அந்த புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி போர்ட் பிளேயர் பகுதியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தென்மேற்கு திசையில் இருந்தது. அதன் நகரும் வேகம் 15 கிலோ மீட்டராக உள்ளது. இன்று மாலை அதன் நகரும். வேகம் மேலும் அதிகரிக்கும்.
13-ந்தேதி (சனிக்கிழமை) அது தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி வேகமாக நகரும் அதற்கு அடுத்த நாள் (14-ந்தேதி) காலை அந்த புயல் வங்க தேசத்தில் உள்ள காக்ஸ் பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா நிபுணர்கள் கணித்துள்ளனர் என்றாலும் மோக்கா புயல் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்த்து உள்ளனர். தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
புயல் காரணமாக அந்தமான், நிக்கோபார் தீவு பகுதியில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில 70 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
- புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவானது. இந்த புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு அதிதீவிர புயலாக வலுப்பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோக்கா புயலால் தமிழகத்திற்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- மோக்கா புயல் இந்திய பெருங்கடலில் இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயலாகும்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் தொடங்கிவிட்டது. கடந்த மாதம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
சென்னையிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பகலில் வெளியில் சென்றவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நாளை மறுநாள் (7-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு வழங்கியுள்ளது. மோக்கா என்ற அரபிமொழி வார்த்தையானது பருவகாலம், நிகழ்வு மற்றும் வாய்ப்பு ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது.
மோக்கா புயல் இந்திய பெருங்கடலில் இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயலாகும். கோடை காலத்தில் எப்போதாவது உருவாகும் அரிய புயல் வகையை சேர்ந்தது. இந்த புயல் மத்திய வங்கக்கடல் அருகே நகர்ந்து மியான்மரை நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நாளை (6-ந்தேதி) உருவாகிறது. இது வலுப்பெற்று 7-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7, 8-ந்தேதிகளில் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 10-ந்தேதி 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த தேதிகளில் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்