search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deletion of name in family cards"

    • பொது விநியோகத்திட்டம்‌ தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல்‌ அலுவலரிடம்‌ நேரில்‌ தெரிவித்து தீர்வு
    • பொது விநியோக கடைகளின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ தரம்‌ குறித்த புகார்கள்‌ இருப்பின்‌ அதன்பேரில்‌ உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயன டையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

    ×