search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake identity card"

    • போலி அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்சில் ஓராண்டாக இலவச பயணம் செய்தார்.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அரசு விரைவு பேருந்து டிக்கெட் பரிசோதகர் ராமகி ருஷ்ணன் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    திருமங்கலம் அப்பக்க ரையிலிருந்து இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது பஸ்சில் இருந்த 52 வயதுடைய நபர் தான் தேனி மாவட்டத்தில் கண்டக்டராக வேலை பார்ப்பதாகவும், எனவே டிக்கெட் எடுக்கவில்லை எனக்கூறி அடையாள அட்டையை காண்பி த்துள்ளார்.

    அதனை பார்த்த ராம கிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போலி அடையாள அட்டையை காண்பித்து இலவச பயணம் செய்தது மதுரை திருநகர் முல்லை நகரை சேர்ந்த பாண்டித்துரை எனவும், இவர் அப்பக்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் கடந்த ஓராண்டாக அரசு பஸ்சில் மோசடி செய்து இலவச பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×