என் மலர்
நீங்கள் தேடியது "fallen tree"
- அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
- வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.
கூடலூர்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக விடியவிடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் குமுளி-லோயர் கேம்ப் மலைச்சாலையில் அடுத்தடுத்து 2 மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மரம் விழுந்ததால் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல அறிவுறுத்தினர். லோயர் கேம்புக்கு வந்த பல்வேறு வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர்.
அதனை தொடர்ந்து வனத்துறையினருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் வாகனங்கள் சென்றன. அதிர்ஷ்ட வசமாக மரம் விழுந்த போது வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு மலைப்பகுதிகளிலும் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறைகள் உருண்டு சாலைக்கு வந்தது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து ஊழியர்களின் உதவியோடு பாறைகளை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்தனர். இருந்தபோதும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.
- திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சாலையில் கழிவுகளோடு மழை நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
- ஏரிச்சாலை கீழ்பூமி பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. பொதுமக்கள் அவ்வழியாக செல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்ட ன்சத்திரம், வேட சந்தூர், வடமதுரை, அய்யலூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சாலையில் கழிவுகளோடு மழை நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். கொ டைக்கானலில் விடுமுறை யை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப ட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும் அறைகளி லேயே முடங்கி யதால் சாலைகள் வெறி ச்சோடி காண ப்பட்டது.
கன மழை காரணமாக ஏரிச்சாலை கீழ்பூமி பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது பொதுமக்கள் அவ்வழியாக செல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அறிந்தும் ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றினர். அதன்பின்னர் போக்குவ ரத்து சீரானது.
திண்டுக்கல் 5.2, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 41, பழனி 4, சத்திரப்பட்டி 17.6, நத்தம் 9, நிலக்கோட்டை 30, வேடசந்தூர் 10, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 10, காமாட்சிபுரம் 12.2, கொடைக்கானல் பூங்கா 31.2 என மொத்தம் மாவட்ட த்தில் 170.20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன.
- சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது.
இங்கு மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கு சின்னமனூரிலிருந்து மகாராஜா மெட்டு வரை 52 கி.மீ நெடுஞ்சாலை செல்கிறது.
இந்நிலையில் பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்தியுள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இக்கலூர்,கும்டாபுரம், ஆகிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது .
- சாலையில் உள்ள பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்தது.
தாளவாடி,
தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வ ப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து தாளவாடி, தொட்ட காஜனூர் ,ஓசூர், சிக்கள்ளி, இக்கலூர்,கும்டாபுரம், ஆகிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது .
பலத்த காற்றால் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள பழமை யான மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக மரத்தை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் யாரும் வராததால் அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் மற்றும் பேருந்துகள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. சில மாணவ -மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கி நடந்தே சென்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் பின்னர். போக்குவரத்து சீரானது.
தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் 20 க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் காய்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும்நிலை உள்ளது. எனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கிடு (36) என்பவரின் 500 நேந்திரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது.