என் மலர்
நீங்கள் தேடியது "film stars"
- துத்திப்பட்டு மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- இந்நிகழ்ச்சியில் நட்சத்திர கிரிக்கெட் அணிகளின் மேலான இயக்குனர் நடிகை நிரோஷா, நடிகர் ம.கா.பா உள்ளிட்ட 6 அணிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
துத்திப்பட்டு மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுவை துத்திப்பட்டு சி.ஏ.பி. மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் 2 நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நட்சத்திர கிரிக்கெட் அணிகளின் மேலான இயக்குனர் நடிகை நிரோஷா, நடிகர் ம.கா.பா உள்ளிட்ட 6 அணிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். தொடங்கிய இந்த போட்டி இரவு முடிவடைகிறது.
பொதுமக்கள் காண்பதற்கு ஏற்கனவே டிக்கெட் விலை நிர்ணயம் செய்து இருந்த நிலையில் இந்த கிரிக்கெட் இலவசமாக பார்க்கலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.