என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Flag Lowering"
- திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப்பெருவிழா 55 நாட்கள் நடைபெற்றது.
- திருவிழாவை முன்னிட்டு ஏற்றி வைக்கப்பட்ட கொடி இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப்பெருவிழா 55 நாட்கள் நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1-ம் தேதி திருவாரூர் ஆழி தேரோட்டமும் நடைபெற்றது. இதன் நிறைவாக நேற்று பங்குனி உத்திர பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவு நாளை முன்னிட்டு கொடி இறக்கம் மற்றும் கோயில் ஆச்சாரியர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏற்றி வைக்கப்பட்ட கொடி இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை முன்னிட்டு சந்திரசேகரர் மற்றும் ஆதி சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
அதன் பின்னர் கொடி இறக்கம் எனப்படும் துவஜாஅவரோகணம் நடைபெற்றது.
கொடியினை இறக்கிய ஆச்சாரியார்கள் அதனை பயபக்தியுடன் தோலில் சுமந்து சென்று கோவில் மண்டபத்தில் வைத்தனர். அதனை தொடர்ந்து தேரோட்டம் உள்ளிட்ட பங்குனி திருவிழா நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற உதவியாக இருந்த கோயில் ஆச்சாரியார்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஆச்சார்ய உற்சவத்துடன் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா நிறைவுற்றது.