என் மலர்
நீங்கள் தேடியது "Foundation stone ceremony canceled"
- ஆந்திராவில் அடிக்கல் நாட்டும் விழா 29-ந்தேதி நடைபெற இருந்தது.
- பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை நைட்ரஜன் பூங்கா, அனகா பள்ளி மாவட்டத்தில் ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வருகிற 29-ந்தேதி நடைபெற இருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருந்தார்.
இதற்காக ஆந்திர பல்கலைக்கழக மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விசாகபட்டினத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பிரதமர் மோடி ஆந்திரா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை வேறு தேதியில் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.