search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy traffic"

    • பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    விவசாயிகளின் 4-வது நாள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல அடுக்குகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதையொட்டி பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    டெல்லியின் காஜிபூர் எல்லையிலும் தீவிர கண்காணிப்பு உள்ளது. தடுப்புவேலிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையே உள்ள 2 பெரிய எல்லைகளான திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மூடப்பட்டு உள்ளன.

    மேலும் அங்கு விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைவதை தடுக்க டெல்லி போலீசார் பல அடுக்கு முள்கம்பிகள், கான்கிரீட் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.



    • 5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
    • மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது.

    இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் ஆகியோர் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் படையெடுத்தனர்.

    5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    மேலும், மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.

    கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டாலும், சூழலுக்கு ஏற்ப வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இல்லை எனவும் கூறப்படுகிறது.

    • சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
    • சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடை கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் முளைத்துள்ளன.

    மேலும் தினமும் வெளி யூர், வெளிமாநி லங்களில் இருந்து 2.50 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாக சேலம் மாநகராட்சி விளங்கி வருகிறது.

    சேலம் மாநகரின் முக்கிய புறவழிச்சாலைகளில் ஒன்றாக உள்ள சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை தினமும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர, 4 சக்கர, கன ரக வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. பெங்களூரு, கோவையில் இருந்து சென்னை, திருச்சி, மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து தான் சென்றாக வேண்டும்.

    இதுபோன்ற சூழலில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ள னர்.

    கடும் போக்குவரத்து நெரிசல்

    சேலம் நகர பகுதியில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, மல்லூர், ராசிபுரம், நாமக்கல், திருச்சி பகுதிகளுக்கும், ஈரோடு, கோவை மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து சென்று வருகின்றன. சேலம் மாநகர வாகனங்களும், வெளிமாவட்டம் சென்று வரும் வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. மேலும் சேலம் மாநகரில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலையில் அதிகளவு இயக்கப்படுகிறது.

    இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சீல நாயக்கன்பட்டி ரவுண்டாவை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதே நிலை அடிக்கடி நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் தாதகாப்பட்டி சாலையி லிருந்து நாமக்கல் பிரதான சாலை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் சேலம் மாநகரம் முழுவதும் அதிகப்படியான பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் மிகவும் தேவைப்படக்கூடிய இந்த ரவுண்டானா பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கான கூடுதலாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக ரவுண்டானா பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியாற்றி நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் பாலம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது.
    • தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவானது.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் பாலம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் முருங்கப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோவில் எதிரில் கடலூர் பிரதான சாலையின் ஒருபுறம் நேற்று நள்ளிரவு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலையின் அடியில் சென்ற பெரிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவானது.

    இதனால் நேற்று நள்ளிரவு முதல் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இன்று காலையில் நயினார்மண்டபம் கோவில் அருகே கடலூர் சாலையில் சென்ற வர்களை ஒரே புறமாக சென்று அந்த பள்ளம் விழுந்த பகுதியை கடந்த பின் இருவழிப்பாதை யாக ஏற்பாடு செய்யப்ப ட்டது. இதனால் கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இன்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளா னார்கள்.

    மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

    போக்குவரத்து போலீசார் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கடலூரில் இருந்து வந்த பஸ்கள், கனரக வாகனங்களை தவளக்குப்பத்தில் மறித்து அபிஷேகபாக்கம் வழியாக திருப்பி அனுப்பினர்.

    அந்த வாகனங்கள் வில்லியனூர் வழியாக புதிய பஸ்நிலையத்துக்கு செல்ல அறிவுறுத்தினர். புதுவை பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்ட பஸ்கள், கனரக வாகனங்கள் இந்திராகாந்தி சிலை வழியாக வில்லியனூர் சென்று தவளக்குப்பம் வழியாக கடலூர் செல்ல அறிவுறுத்தப்பட்டன.

    இருப்பினும் கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த வழியில் சென்றதால் கடும் நெரிசலோடும், அவதியோடும் அப்பகுதியை கடந்து சென்றனர். இந்த நிலையில் குடிநீர் குழாயை மாற்றி சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று இரவுதான் இந்த பணி முடிவடையும் என தெரிகிறது. இதன்பிறகே இந்த சாலை வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதி க்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மரப்பாலம் சந்திப்பில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் அந்த பணி தற்போது முடிவடைந்து போக்குவரத்து சீராவதற்குள் முருங்கப்பாக்க த்தில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடை உள்ளதால் பொதுமக்கள் முக சுளிப்புடன் சென்றனர்.

    • காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை சாலையில் காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த நிலையில் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் மட்டுமல்லாது காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அதிவேகமாக வாகனங்கள் வருகின்றன. இதனால் சாலையை கடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார்களை நியமித்து விபத்துகளை தடுக்க வேண்டும். காந்திசிலை, தேரடி, மார்க்கையன்கோட்டை, ரவுண்டானா ஆகிய பஸ் நிறுத்தங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .
    • சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையிலும் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் புனித வெள்ளியை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் கோடைவெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாகவும் இங்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கொடைக்கானல் மலைச்சாலை முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைகளான வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலை , வெள்ளி நீர்வீழ்ச்சி பிரதான சாலை , ஏரிச்சாலை , அப்சர்வேட்டரி சாலை , செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 கி.மீ. வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து எறும்பு போல் ஊர்ந்து சென்றன . இதனால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர் . மேலும் சுற்றுலா பயணிகள் சில இடங்களில் நடந்து செல்லும் நிலை உள்ளது. கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .

    பிரதான நெடு ஞ்சாலையில் சிறுசிறு கடைகளின் ஆக்கிரமிப்பு, கனரக வாகன ஆக்கிரமிப்பு போக்கு வரத்து இடையூறுக்கு காரணமாக உள்ளது. எனவே தொடர் விடுமுறை என்பதாலும், சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையிலும் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை யாகவும் உள்ளது.

    • கொடைக்கானல் நகரின் முக்கிய சந்திப்பு மூஞ்சிக்கல் பகுதியாகும். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவது இப்பகுதியாகும்.
    • பிரதான சாலையிலேயே மணல் ஜல்லி,செங்கல் கொட்டி வியாபாரம் செய்து மேலும் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரின் முக்கிய சந்திப்பு மூஞ்சிக்கல் பகுதியாகும். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவது இப்பகுதியாகும்.

    மூஞ்சிக்கல் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் போக்குவரத்து நெரிசல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில் மணல் ஜல்லி வியாபாரிகளுக்கும் திடீர் கடைக்காரர்களுக்கும் நெடுஞ்சாலை துறையினர் அனுமதி அளித்தது போல் செயல்பட்டு வருகின்றனர்.

    பிரதான சாலையிலேயே மணல் ஜல்லி,செங்கல் கொட்டி வியாபாரம் செய்து மேலும் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால் இப்பகுதி பிரதான சாலையிலும் வளைவுச்சலையிலும் முறையாக வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    மாலை நேரங்களில் இப்பகுதியில் இயங்கும் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகள் இந்த வளைவு சாலையில் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்களால் நடுரோட்டில் நடந்து செல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ப்பலி ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    காலை மாலை வேளைகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் கடந்து செல்லும் இப்பகுதி சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எந்நேரமும் உயிர்ப்பலியோ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து காவல்துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் இதனை கண்டு கொள்வதாக இல்லை.உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் மணல், ஜல்லி வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்தகை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கொடைக்கானலில் பிரதான பகுதியான அண்ணா சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் காக்க விரைவான தீர்வை மேற்கொள்ள வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அண்ணா சாலை நகரின் பிரதான பகுதியாக உள்ளது. இந்த சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 10 மணிக்கு மேல் அன்றாட பணிகளுக்கு செல்வோர், அலுவலக வேலைக்கு செல்வோர் என பலரும் இவ்வழியில் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது.

    இவ்வழியில் சரக்கு வாகனங்களை இயக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்க ப்பட்டுள்ளது. ஆனால் சரக்கு வாகன ஓட்டுனர்கள் அவர்கள் நினைத்த நேரத்தில் இவ்வழியாக வாகனத்தை இயக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதால் அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைகின்றனர்.

    ஒரு வழிச் சாலையாக இந்த சாலை மாற்ற ப்பட்டிருந்தாலும் விதியை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக உள்ளது. போக்குவரத்து போலீசார் ஒரு வழி பாதையில் செல்வோர் மற்றும் பார்க்கிங் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள அண்ணா சாலை பகுதியில் வாகனங்களை நிறுத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மூஞ்சிக்கல் பகுதியில் கொடைக்கானல் - வத்தலகுண்டு செல்லும் பிரதான சாலையின் விரிவாக்க பணி என்ற பெயரில் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த கடைகள் நெடுஞ்சாலைத்து றையால் பல மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. ஆனால் இன்று வரை சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.

    மூஞ்சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக பகுதிக்கு அருகிலேயே பிரதான சாலையில் கடைகள் முன்பு மணல், ஜல்லி, செங்கல் போன்றவைகளை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டு வியாபாரங்கள் நடு ரோட்டிலேயே நடைபெற்று வருகிறது. இதனை நெடுஞ்சாலை துறையினரும் போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்ளாததால் உயிர் பலி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூஞ்சிக்கல் பகுதியில் பிரதான சாலையின் இரு புறங்களிலும் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் சாலையின் வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் நெடு ஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கண் துடைப்புக்காக சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ஆனால் பிரதான சாலைகளில் காய்கறி வியாபாரங்கள்செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கு சாலையி லேயே சுற்றுலா பயணி கள் வாகனங்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசலும் விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

    முறையான பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. ஆனால் பிரதான நெடுஞ்சாலைகளில் இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழியும் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டிச்செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் காக்க விரைவான தீர்வை மேற்கொள்ள வேண்டும்.

    ஈரோடு மேட்டூர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய மேம்பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய சாலைகளில் ஒன்றாக மேட்டூர் ரோடு திகழ்கிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர், கோவை, ஊட்டி, பழனி, மதுரை, கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பஸ்கள் மேட்டூர் ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்துக்குள் சென்று வந்தன. ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பஸ்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வாசுகி வீதி வழியாக திருப்பி விடப்பட்டன.

    பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டாலும், மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. சுவஸ்திக் கார்னர் சிக்னலில் இருந்து முனிசிபல் காலனி வரை வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், பகலில் மேட்டூர் ரோடு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடிதான் செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் வாசுகிவீதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து பஸ்களும் மேட்டூர் ரோடு வழியாக செல்கிறது. இதனால் நேற்று முன்தினம் மேட்டூர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “ஈரோட்டில் உள்ள முக்கிய சாலைகளில் மேட்டூர் ரோட்டில்தான் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரப்ரோடு, ஈ.வி.என்.ரோடு, பெருந்துறை ரோட்டை இணைத்து புதிய மேம்பாலம் கட்டப்படும்போதே மேட்டூர் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் மேம்பாலம் கட்டப்படவில்லை. எனவே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.
    ×