search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helpline"

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

    ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • காசா முழுவதும் குண்டு வீச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • அனைத்து முக்கிய சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது

    கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.

    இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கிறது. காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தேடி தேடி வேட்டையாடி வருகின்றனர்.

    காசா முழுவதும் குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. இஸ்ரேலின் தாக்குதலால் காசாவிலுள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது.

    தற்போது அதிதீவிரமாக 5-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேர அவசர உதவி சேவையை குறித்து இந்தியா அறிவித்திருக்கிறது.

    "பாலஸ்தீனத்தில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் அங்குள்ள இந்தியர்களுக்கான அலுவலகத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்" என இந்தியர்களுக்கான அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தவிர, அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்காக இங்கு வெளியுறவு துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    1800118797 (இலவச எண்)

    +91-11 23012113

    +91-11-23014104

    +91-11-23017905

    +919968291988

    • சைபர் குற்றவாளிகளால் பொதுமக்கள் பெரும் பணத்தை இழந்து வருகின்றனர்.
    • குற்றவாளிகளின் மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் சைபர்‌ குற்றவாளிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்ட‌ போலீஸ் அலுவலக வளாகத்தில், இணைய தள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அறிமுகம் இல்லாத யாராவது ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தினம்தோறும் சைபர் குற்றவாளிகளால் பொதுமக்கள் பெரும் பணத்தை இழந்து வருகின்றனர். எவ்வளவோ விழிப்பு ணர்வு ஏற்படுத்தி னாலும் குற்றவாளிகள் எப்படியா வது ஏமாற்றி பொது மக்கள் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு சேமித்த மொத்த பணத்தையும் திருடி விடுகின்றனர். இதை தடுக்க 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் செய்தால், இழந்த பணத்தை மீட்கலாம் என்ற விபரமும் பலருக்கு தெரிவதில்லை. தாமதமாக புகார் தந்தால் பணத்தை மீட்பது கடினம். மக்களின் விழிப்புணர்வுக்காக இந்திய அரசு வலைத் தளத்தில் இதுவரை பதிவான குற்றவாளிகளின் மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளது. எனவே உங்களை தொடர்பு கொண்டவரின் மொபைல் எண், வங்கி எண் ஆகியவற்றை வலைத் தளத்தில் ஒருமுறை சோதித்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குற்றங்கள் பற்றி புகார் அளிக்க சப்- இன்ஸ்பெக்டர் செல் எண்: 9498202106-ல் தகவல் தெரிவிக்கவும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வங்க கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

    சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சென்னையில் பல இடங்களில் 10செ.மீ-க்கு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 14செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. 1913, 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்ணிற்கு கால் செய்தும், 9445477205 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என எல்லா அவசர உதவிக்கும் ‘112’ என்ற ஒரே எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்கள், 19-ந்தேதி முதல் செயல்படுத்த உள்ளன. #EmergencyNumber112 #Helpline
    புதுடெல்லி:

    தற்போது, அவசர போலீஸ் உதவிக்கு ‘100’ என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு ‘101’ என்றும், ஆம்புலன்சுக்கு ‘108’ என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு ‘1090’ என்றும் தனித்தனி அவசர உதவி எண்கள் (ஹெல்ப்லைன்) உள்ளன.

    இந்நிலையில், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் ‘112’ என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் ‘911’ என்ற ஒரே எண் இருப்பதுபோல், இந்தியாவில் இதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

    இத்திட்டத்தில் இணைய ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக அவசர உதவி மையம் உருவாக்கப்பட வேண்டும். அங்கு அவசர உதவி அழைப்புகளை கையாள பயிற்சி பெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த மையங்கள், மாவட்ட கட்டுப்பாட்டு மையத்துடனும், அவசர உதவி வாகனங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கும். இதை செயல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.321 கோடியே 69 லட்சம் வழங்குகிறது.

    இந்த திட்டம், இமாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.

    இந்நிலையில், தமிழநாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வருகிற 19-ந்தேதி இத்திட்டத்தில் இணைகின்றன. படிப்படியாக நாடு முழுவதும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.

    இந்த எண் மூலம் உதவி பெறுவதற்கு, தொலைபேசியில் ‘112’ எண்ணை அழுத்தலாம் அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள எச்சரிக்கை பொத்தானை 3 தடவை விரைவாக அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு சென்று விடும். சாதாரண செல்போனில் 5 அல்லது 9-ம் எண்ணை நீண்ட நேரம் அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு சென்று விடும்.

    இதுதவிர, இணையதளம் மூலமாகவும், ‘112’ என்ற ‘ஆப்’ மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென ‘ஷவுட்’ என்ற அம்சமும் உள்ளது. அதை பயன்படுத்தினால், பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் உஷார்படுத்தப்பட்டு உதவிக்கு வருவார்கள். #EmergencyNumber112 #Helpline

    ×