search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honda PCX Hybrid"

    ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    ஹோன்டா PCX 125 ஸ்கூட்டரை ஜப்பானில் வெளியிட ஹோன்டா திட்டமிட்டு வருகிறது. இது ஹோன்டாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் செப்டம்பர் 14-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஜப்பான் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டராக ஹோன்டா PCX 125 இருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜப்பான் நாட்டில் மட்டும் PCX 125 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    எனினும் இந்த ஸ்கூட்டர் உலகின் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ஹோன்டா PCX 125 இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹோன்டா PCX 125 ஹைப்ரிட் மாடலில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் மற்றும் 48 வோல்ட் லி்தியம்-அன் பேட்டரி வழங்கப்படுகிறது.


    இதன் 0.98 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் துவக்கக்கட்ட அக்செலரேஷன் வழங்கி, 4 நொடிகளுக்கு பின் பெட்ரோல் இன்ஜின் இயங்கும். இதன் 4-ஸ்டிரோக் இன்ஜின் 12 பி.ஹெச்.பி. மற்றும் 1.5 பி.ஹெச்.பி  செயல்திறன் வழங்கும். இந்த பேட்டரி ஸ்கூட்டர் ஓடும்போதே சார்ஜ் ஆகும். மேலும் இந்த ஸ்கூட்டரின் அக்செலரேஷன் ஹோன்டா PCX ஸ்டான்டர்டு மாடலை விட வித்தியாசமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹோன்டா PCX 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர் D மற்றும் S என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் - இதன் S மோட் தேவையான சமயத்தில் கூடுதல் செயல்திறன் வழங்கும். PCX 125 மாடலில் ஹோன்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம் கொண்டிருக்கும் என்பதால் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய சாவி தேவைப்படாது என கூறப்படுகிறது.

    ×