என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "JammuKashmir"
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துதார்.
தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு ஜம்ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " பாகிஸ்தானில் உள்ள தலைமைக்கு நான் கூற விரும்புகிறேன், அவர்கள் உண்மையிலேயே இந்தியாவுடன் நட்புறவை விரும்பினால், அவர்கள் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மேலும் காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது" என்றார்.
- பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
- முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் இந்து பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அவர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்கி வருகிறாரகள். இதில் பள் ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்
இந்த நிலையில் அங்குள்ள பதேர்வா நகரில் உள்ள ஒரு மசூதியில் இருந்து மோதலை தூண்டும் வகையில் வீடியோ வெளியானது. சமுக வலை தளங்களில் இது வேகமாக பரவியதால். பதேர்வா நகரில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் தோடா,கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்க்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிஜேந்திரசிங் கூறும் போது மூத்த மத தலை வர்கள் ஒன்று கூடி பேசி அமைதியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீ து கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயிற்சி அளித்து பயங்கரவாத இயக்கத்துடன் இணைத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில் இருந்து 4 பேரை அல்-பத்ர் இயக்கத்தில் இணைத்து, அவர்களை 3 பயங்கரவாதிகள் அழைத்து செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டுப்பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகள், புதிதாக இணைந்த 4 பேரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மேலும், பலத்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 4 பேர் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தனர்.
மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsSurrender
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பாண்டி போரா மாவட்டத்தில் குரேஷ் செக்டார் உள்ளது.
இங்குள்ள கோவிந்த் நல்லா என்ற பகுதியின் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அங்கிருந்த ராணுவ ரோந்து வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டவாறு முன்னேறினர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் குண்டு பாய்ந்து பலியானார்கள். பலியான ராணுவ மேஜரின் பெயர் கே.பி.ரானே என்பது தெரியவந்தது. ஜாமிசிங், விக்ரம்ஜித், மன்தீப் ஆகிய வீரர்கள் வீர மரணம் அடைந்தது தெரிய வந்தது.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ராணுவ வீரர்களின் அதிரடியான தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஓடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்