என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maruthamalai"
- ‘மருதமலை’ திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது.
- டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
தனது 2-வது மனைவி மகனுடன் மாயமானது குறித்து புகார் கொடுக்க வந்த டிரைவர் அவளுக்கு நான் 3-வது கணவர் என்று கூறியதால் அவரை விசாரித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைசுற்றி கிறங்கி போனார்.
நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போன்று நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு பேண்ட், சட்டை அணிந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்தார். அவரிடம் அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்த போது, தனது மனைவி மற்றும் 5 வயது மகன் மாயமாகி விட்டதாகவும் புகார் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் குறித்து அவர் விசாரித்த போது அவருக்கு தலைசுற்றலே வந்து விட்டது என்று கூறலாம்.
ஆம். நடிகர்கள் அர்ஜூன், வடிவேலு நடித்த 'மருதமலை' திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை நினைவு கூரும் வகையில் அந்த டிப்-டாப் நபர் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது. அந்த பட நகைச்சுவை காட்சியில் போலீஸ் நிலையத்துக்கு தம்பதியாக வந்தவர்களிடம் ஏட்டுவான நடிகர் வடிவேலு விசாரிக்கும் போது, இவர் தான் என் முதல் கணவர், இவர் எனக்கு முறைப்படி தாலிகட்டிய கணவர் என்று அந்த பெண் பட்டியலிட்டு ஏட்டு வடிவேலுவை கிறுகிறுக்க வைப்பார்.
அதேபோல் தான் புகார் கொடுக்க வந்தவரிடம் விசாரித்த போது, அவர் டிரைவர் என்பதும், தனது 2-வது மனைவியும், 5 வயது மகனும் மாயமாகி விட்டதாக கூறி இருந்தார். இதில் என்ன 2-வது திருமணம் தானே என்று யோசிக்க தொடங்கினால், காணாமல் போன பெண்ணுக்கு வந்த டிரைவர் 3-வது கணவராம். இப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலு பாணியில் சற்று தவித்து தான் போனார்.
இருப்பினும் அந்த டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர். தனது 2-வது மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் 3-வது கணவர் புகார் கொடுத்தது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வலைதளத்தில் பரப்பினர்
- சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா? என கேள்வி
வடவள்ளி,
மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு பின் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. நேற்று சூரசம்ஹாரம் மற்றும் இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த 2 முக்கிய விழாக்களிலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் மலைப்பாதை வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கலெக்டர் கிராந்திகுமார் பாடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரும் 2 நாட்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தார். இதனால் பக்தர்கள் கோவில் பஸ்களிலும், நடைபாதை வழியாகவும் சென்றனர்.
இன்று காலை நடை பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சென்றனர். முதியவர்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு மலையை அடைந்தனர். அங்கு சென்று பார்த்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவில் வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் நின்றன.
அந்த கார்களை பார்த்த தும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை மட்டும் கால்நடையாக மலையேறச் செய்து விட்டு அவர்களை மட்டும் எப்படி காரில் வர அனுமதித்தனர் என ஆதங்கப்பட்டனர். சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததை தங்கள் செல்போனில் படமும் பிடித்து வலைத ளத்தில் பரப்பினர்.
இதுமட்டுமல்லாமல் திருக்கல்யாண நிகழ்ச்சி யின் முன்வரிசையிலோ, அருகிலோ சாதாரண பக்தர்களால் செல்ல முடிய வில்லை. அவரவர்களுக்கு வேண்டியவர்களை முன்வரிசையில் அமரச் செய்து இருந்தனர். சாதாரண பக்தர்கள் வெகு தொலையில் நின்றபடியே சாமியை தரிசித்து விட்டுச் சென்றனர்.
இதனால் இனி வரும் காலங்களிலாவது அதிகாரிகள் அனைவரையும் சமமாக பாவித்து தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக மலை அடிவாரத்தில் உள்ள டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டபோது தங்களுக்கு 86 வாகனங்களை மலைப்பாதையில் அனுமதிக்க பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- மருதமலை பகுதியில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- ஆதரவற்ற 3 பேரை போலீசார் மீட்டு, ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
வடவள்ளி
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு , ஆதரவற்ற நிலையில் ரோட்டு ஓரங்களில் உள்ளவர்களை மீட்டு அவர்களது சொந்தங்கள் மற்றும் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளார். அதன் பெயரில் பல பகுதியில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மருதமலை அடிவாரப்பகுதியில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது அங்கு ஆதரவற்ற 3 பேரை போலீசார் மீட்டனர். அவர்கள் அரசு ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் ஒருவர் தனது மகன் படிப்புக்காக பிச்சை யெடுப்பதாகவும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறினார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
- விஜயதசமி மற்றும் மருதமலை முருகன் கோவிலில் மகிஷாசுரன் வதம் நிகழ்ச்சி நடந்தது.
- மூலவர் தங்க கவச உடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்து மாகாதீபாரதணை காட்டப்பட்டது
வடவள்ளி,
கோவை மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டத்தின் சுற்றுப்புறபகுதிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
முக்கியமாக விழா தினங்களில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று சரஸ்வதி பூஜையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இன்று விஜயதசமி மற்றும் மருதமலை முருகன் கோவிலில் மகிஷாசுரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து கோ பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜை நடந்தது. 8.30 மணிக்கு கால சந்தி பூஜை நடந்தது. மூலவர் தங்க கவச உடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்து மாகாதீபாரதணை காட்டப்பட்டது.
11:30 மணியளவில் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
12 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுப்பிரமணியசாமி, மகிஷாசூரனை வன்னி மரத்தில் அம்பு விட்டு வதம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.
- பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
- ஒரே நேரத்தில் 50 பேர் முடிகாணிக்கை அளிக்கு அளிக்கலாம்.
கோவை:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்று.
கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்க ளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் வர மலைப்பாதை மற்றும் படிக்கட்டுப்பாதை ஆகிய 2 வழித்தடங்கள் உள்ளன.
பொதுபோக்குவரத்து வாகனங்களில் வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து கோவில் பஸ் மூலம் மேலே அழைத்து செல்லப்படுகின்றனர். சொந்த வாகனத்தில் வரும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு செல்கின்றனர். தவிர படிக்கட்டுகள் வழியாக நடந்தும் பக்தர்கள் செல்கின்றனர்.
மேலே சென்ற பிறகு 100க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் வயதான பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் கூறிய தாவது:-2.50 கிேலா மீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதை கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மலைப்பாதையை சீரமைக்க வேண்டும். கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தகம் ஏற்படுத்த வேண்டும்.முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தை விரிவுபடுத்த வேண்டும். வயதானவர்களுக்கு உதவும் வகையில் லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக மருதமலை முருகன் கோவிலின் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்சினி கூறியதாவது:-மருதமலையில் வயதான பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ரூ.6 கோடியே 45 லட்சம் மதிப்பில் லிப்ட் அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டி, வாகன நிறுத்த கம் அருகே 2 லிப்ட் அமை க்கப்படும். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு லிப்ட் மேலே சென்ற பின்னர், அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டு பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, மற்றொரு லிப்ட்டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோவிலுக்கு செல்லும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு லிப்டிலும் ஒரே சமயத்தில் தலா 20 பேர் செல்லாம். அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்படடு பணிகள் ஒப்படைக்கப்படும்.கோவிலின் அடிவாரத்தில் 93 சென்ட் பரப்பளவில் ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் முடிகாணிக்கை அளிக்கலாம். இதற்கான பணி ஆணை ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டும் பணி தொடங்கப்படும்.
மருதமலை கோவிலின் மலைப்பாதை ரூ.3.56 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. கோவிலில் இட நெருக்கடி இன்றி வாகனங்களை நிறுத்த ஏதுவாக மலையின் மீது ஒரே சமயத்தில் 200 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பன்னடுக்கு வாகன நிறுத்தகம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலையில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பிடமும் கட்டப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்