என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Merchants' Associations"
- வணிகவரித் துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரைக் கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானது.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையங்களில் உள்ள மாவட்ட வணிகவரித்துறை அலுவலகங்களில் இன்று மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை:
வணிகவரித் துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரைக் கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக, தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது.
மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமான வணிகவரித் துறையின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் வணிகவரித் துறை அதிகாரிகள் சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20,000 வரை வசூலிப்பதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அனைத்து சில்லரைக் கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும்போது, அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அப்பொருட்கள் ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிக வரித்துறை அதிகாரிகள், சில்லரை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில், பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல.
இது சில்லரை வணிகத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும். எனவே, 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையங்களில் உள்ள மாவட்ட வணிகவரித்துறை அலுவலகங்களில் இன்று மனு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் நாடார் தலைமையில் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பாளை ஆயுதப்படை சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.
இதில் வடக்கு மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார், கூடுதல் செயலாளர் விநாயகம், கவுரவ ஆலோசகர் பன்னீர்செல்வம், தொகுதி செயலாளர் கருப்பசாமி, முக்கூடல் சங்க தலைவர் பூமி பாலக பெருமாள், பாளை தொழில் வர்த்தக சங்க செயலாளர் சோமு, மாவட்ட இணைச்செயலாளர் சாலமோன், மாவட்ட துணைச்செயலாளர் ஸ்டீபன் பிரேம்குமார் , மாவட்ட பொருப்பாளர் பெரிய பெருமாள், செய்தி தொடர்பாளர் பகவதி ராஜன் மற்றும் சங்க நிரிவாகிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்